பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

துரத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்ததும் அவனையடைய வேணடும் என்ற பித்துப் பிடிக்கிறது. அப்படிப் பித்தியாகும் வரையில் ஒரு நிலை; அவள் உணர்ச்சி வளரும் நிலை, அந்த, அளவில் நின்றால் தலைவன் தாளை அடையும் இன்பம், அவன் திருவடிக்கண் சேரும் திரு, எய்துமா?

அதற்குமேல் அவன் செயல்படுகிறாள். தன்னைப் பற்றிக் கொண்டிருக்கும் பற்றுக்களினின்றும் நீங்கி இறைவனே நாடி வருகிறாள். அன்னையையும் அத்தனையும் நீத்து ஆருரண்ணலை நாடி வருகிறாள். ஒரு பெண் ஆடவனைத் தேடி வலியச் செல்வது பிழையல்லவா? இது உலகியலுக்கு அடுக்குமா! அவன் இவற்றையெல்லாம் பார்க்கவில்லை. உலகத்தார் ஆசாரத்தை உதறி எறிகிறாள்.

தன்னையே மறந்து தன் பெயர் கெட்டுப் போகத் தலைவன் தாளைத் தலைப்படுகிறாள்; அவன் திருவடிக்கண் சேர்ந்து விடுகிறாள். -

அவளைப் போல, எல்லாவற்றையும் உதறி எறிந்துவிட்டு வேறு எதையும் நினைக்காமல் ஏழைக்கு ஒருபாகம் ஈந்தானுடைய திருவடியையே எண்ணிச் சென்று அடைய வேண்டும். அப்போதுதான் அந்த இன்பத் திரு கிடைக்கும். இப்படி அடைய ஒரு திறம் வேண்டும்; ஒரு துணிவு வேண்டும். துணிவு பிறந்துவிட்டால் சென்று அடைவது எளிதாகும்.

அந்தத் திரு நம்மை வந்து அடையட்டும் என்று சும்மா இருந்தால் கிடைக்காது; நாமே சென்று அடைய வேண்டும். *தான் தேடாப் பொன்னுக்கு மாற்றம் இல்லை, உரையும் இல்லை என்பார்கள். இவ்வாறு முயன்று சென்று அடைந்தால்தான் அந்தத் திருவை அடையலாம்; அதனால் இன்பம் பெறலாம்.

ஏ மட நெஞ்சமே, பேதையே, நீ சென்று அடைவது அல்லாமல், அதுவாக உன்னைத் தேடி வரும் என்று எண்ணாதே; இருந்த இடத்திலே இருந்தபடியே பெறத்தான்