பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321

உன்னால் முடியுமா? நீ பெறும் நிலையை உடையை ஆவாயோ?' என்று கேட்கிறார் அம்மையார்.

திறத்தால் மடநெஞ்சே, சென்று அடைவதல்லால்
பெறத்தாலும் ஆதியோ? பேதாய்!

நெஞ்சு சென்று அடைவதாவது, மற்ற எண்ணங்களை யெல்லாம் விட்டொழித்து, உயர்ந்த நிலைக்கு ஏறி, இறைவனையன்றி வேறு எதையும் பற்றாத யோக நிலையைப் பெற்று நிற்றல்.

நெஞ்சத்தால் நினைப்பது என்பது எளிதானாலும் அந்த நெஞ்சம் பல பிறவிகளில் ஏற்றிக் கொண்ட பற்றையும் வாசனையையும் விட்டொழிப்பது மிகவும் அரிது. அதை இடைவிடாத பயிற்சியினால் பெற வேண்டும், "இக்கரை கடந்திடில் அக்கரையே, இனிப்பது சிதம்பரைச் சர்க்கரையே!" என்று இராமலிங்கசுவாமிகள் அழகாகப் பாடியிருக்கிறார். அக்கரை செனறால் இனிக்கும் சர்க்கரையைப் பெறலாம். அது எளிது. இக்கரை கடப்பது அரிது. முன்பாட்டுக்களில் சிந்தைக்கு ஆண்டவன் வசமாவான் என்ற எளிமையைச் சொன்னார். இந்தப் பாட்டில் சிந்தை, நின்ற நிலையை நீத்துப் பற்றொழிந்து நிற்பதன் அருமையைச் சொன்னார். அந்த அரிய தகுதி அல்லது திறம் வந்து விட்டால் ‘உள்நினைத்த சிந்தையராய் வாழ்வது’ எளிதாகிவிடும்.

திறத்தால் மடநெஞ்சே! சென்று அடைவது அல்லால்,
பெறத்தானும் ஆதியோ, பேதாய்?—நிறத்த
இருவடிக்கண் ஏழைக்கு ஒருபாகம் ஈந்தான்
திருவடிக்கண் சேரும் திரு.

[இயல்பாகவே மடமையையுடைய நெஞ்சே, சொன்னாலும் புரிந்து கொள்ளாத பேதமையயுடைய மனமே, நல்ல வண்ணமுடைய இரண்டு மாவடுவின் பிளப்பைப்

நா—21.