பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

போன்ற திருவிழிகளை உடைய பெண்ணாகிய அம்பிகைக்குத் தன் ஒரு பாகமாகிய இடப்பாகத்தை வழங்கினவனாகிய இறைவனுடைய திருவடியைச் சேர்ந்து இன்புறும் வளவாழ்வு, அதற்குரிய தகுதியோடு, அதனைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தோடு, எல்லாவற்றையும் விடடொழித்து அதனையே நாடிச் சென்று அடைவதல்லாமல், இருந்த இடத்தில் இருந்தபடியே பெறுவதற்கு நீ தகுதியுடையை ஆவாயோ?

திறம்-வன்மை; தகுதி. மடமை இயல்பாக அமைந்த அறிவின்மையையும், பேதமை - சொல்லியும் தெரிந்துகொள்ளாத பேதமையையும், சொல்லியும் தெரிந்து கொள்ளாத அறிவின்மையையும் குறித்தன. பெறவும்- இருந்த இடத்தில் இருந்தபடியே பெறுவதற்கும். தான்: அசை, ஆதியோ ஆவாயோ! அதற்குரிய இயல்புடையை ஆவாயோ? நிறம்-அழகிய வண்ணம்; இதை மாவடுவுக்கும் அடையாக்கலாம்:கண்ணுக்கும் அடையாக்கலாம். வடி–மவாடுவின் பிளப்பு. ஏழையென்பது வறியவள். அறிவிலி என்பவற்றைக் குறிக்காமல் பெண் என்பதைக் குறித்தது.

திரு. பெறவும் ஆதியோ என்று கூட்டுக.]

பலகால் முயன்று விட்டொழித்த மனம் இறைவனுடைய தரிசனத்தைப் பெறும் என்பது கருத்து.

இது அற்புதத் திருவந்தாதியில் 47-ஆவது பாட்டு.