பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49. மதியில்லா அரவு


காரைக்காலம்மையார் இறைவனிடம் மிகவும் உரிமையோடு பேசுபவர். தம்முடைய குழந்தையுடன் பேசுவது போல ஒரு சமயம் பேசுவார். தம்முடைய தந்தையுடன் பேசுவது போலப் பேசுவார். இறைவனுக்கு அறிவுரை சொல்வது போலச் சில சமயங்களில் பேசுவார். அவனுடைய நிலைக்கு இரங்குவது போலச் சில சமயம் பேசுவார். நகைச்சுவையோடு பேசுவதும் உண்டு. புதிய புதிய கற்பனைகளைச் செய்துகொண்டு பாடுவதையும் அவரிடம் காணலாம்.

இப்போது அவர் தமக்குள்ளே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறார்.

இறைவன் திருமுடியின் மேலுள்ள பிறையைப் பார்க் கிறார். அவன் மார்பிலுள்ள பன்றிக் கொம்பைப் பாார்க்கிறார். அவன் அணிகலனாக அணிந்த பாம்பைப் பார்க்கிறார். பிறையும் பன்றிக் கொம்பும் இருந்த இடத்திலே இருக்கின்றன. பாம்போ படமெடுக்கிறது; ஆடுகிறது: தலையை மேலும் கீழும் தூக்கித் தாழ்த்திப் பார்க்கிறது. சிறிது நேரம் அது சும்மா இருக்கிறதில்லை; தன் விருப்பம் போல அது அசைந்தும் ஆடியும் நிமிர்ந்தும் தாழ்ந்தும் இயங்கியபடியே இருக்கிறது.

‘இந்தப் பாம்பு எதற்காக இப்படிக் கீழும் மேலும் அசைந்து ஆடிப் பார்க்கிறது? இறைவனிடம் வந்தபிறகும் இந்த ஆட்டம் எதற்கு சும்மா இருந்த இடத்திலே ஆடாமல் அசையாமல் சுகமாக இருக்கலாமே!’ என்ற எண்ணம் அம்மையாருக்குத் தோன்றுகிறது. அந்தப்