பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

விராவு கதிர்விரிய ஒடி—விராவுதலால்.

இறைவனுக்கு ஒப்பாக யாரையும் சொல்ல முடியாது. அவன் தனக்கு உவமை இல்லாதவன். அப்படி ஏதாவது உவமையைச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்றால், அவனுக்கு அவனே உவமை என்றுதான் சொல்ல இருப்பவன் அவன். அவனுக்கு ஒப்பாக வேறு யாரையும் சொல்ல முடியாது என்பது உண்மைதான். ஆனால் நம் கண்ணுக்குத் தெரிகிற அவன் சடைக்கும் நிலவுக்கதிருக்கும் உவமை சொல்லலாமே!

சடை பொன்புரியைப் போல இருக்க, இடையிடையே விராவும் நிலவுக்கதிர் வெள்ளிப்புரியைப் போல இருக்கிறது. அவ்வாறு தோன்றுகிறது அல்லவா? என்று அம்மையார் கேட்கிறார்.

பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தால்
  தன்னோடே ஒப்பான் சடை? .

"ஆம்" என்று நாமும் தலையாட்டி அந்த உவமையை ஒப்புக்கொள்ளலாம் அல்லவா?

‘அவனுடைய அங்கத்துக்கு உவமை கூற வருகிறீர்களே! அங்கியாகிய அவனுக்கு ஏதாவது உவமையைச் சொல்லக்கூடாதா?’ என்று யாராவது கேட்டுவிடப் போகிறார்களே என்று எண்ணினர் போலும். அந்தப் பெருமானுக்கு ஒப்புக் கூற யாரால் முடியும்? அவனுக்கு அவனே ஒப்பு. ஏதோ கற்பனையில் அவன் சடைக்கும் நிலாக்கதிருக்கும் உவமை கூறலாம் என்று புகுந்தேன்' என்பாரைப் போல, தன்னோடு ஒப்பான்' என்று சொல்கிறார்.

அராவி வளைத்தனைய அம்குழவித் திங்கள்
விராவுகதிர்விரிய ஒடி—விராவுதலால்