பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

331

பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தால் போலாவே,
தன்னோடே ஒப்பான் சடை?

[அரத்தால் வெள்ளித் தகட்டை அராவி வளைத்தாற் போன்ற தோற்றத்தையுடைய அழகிய இளம் பிறையிலிருந்து வெளியே தோன்றுகின்ற கதிர்கள் விரிவாக ஒடி இடையிடையே விராவுதலால், தனக்குத்தானே ஒப்பாகிய இறைவனுடைய சடைகள், பொன்னாலான புரிகளோடு வெள்ளிப்புரிகள் கலந்து அமைந்தாற் போலுள்ளன அல்லவா?.

வளைத்தால் அனைய என்பது வளைத்தனைய என நின்றது; தொகுத்தல் விகாரம். இறைவன் திருமுடியில் ஒரு கலையையுடைய சந்திரனை வைத்திருக்கிறாறர் அதனால் இது குழவித் திங்கள் என்றார். கதிர்-நிலாக் கிரணங்கள். புரிந்தால் – புரியாக அமைந்தால்; ஏகாரம், வினா. சடை சடைகள்: பால்பகா அஃறிணைப் பெயர். சடை போலாவே என்று கூட்டுக.]

இறைவன் சடை பொன்னைப் போலவும், முடியிலுள்ள பிறையின் கதிர்கள் வெள்ளியைப் போலவும் தோன்றுகின்றன என்பது கருத்து.

இது அற்புதத் 'திருவத்தாதியில் வரும் 49-ஆம் பாடல்.