பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51. கொன்றையும் கனியும்


காரைக்காலம்மையார் இன்னும் இறைவனுடைய சடை முடியை விட்டுத் தம் கண்ணை அகற்றவில்லை. கொன்றை மலரை அணிந்த அந்தச் சடைமுடியை உற்று உற்றுப் பார்க்கிறார் அங்கே வலப் பக்கத்தில் அணிந்திருக்கும் அழகிய சந்திரனைப் பார்க்கிறார். த்ம்முடைய பார்வையைச் சற்றே இறக்கி பார்க்கிறார். எம்பெருமானுடைய வாம பாகத்தில் ஒட்டி உறைகின்றாள் உமாதேவி.

ஐயனுடைய சடையையும் அங்குள்ள கொன்றையையும் பார்த்த கண்ணோடு அம்மையினுடைய கூந்தலையும் பார்க்கிறார். இமாசலத்தில் தோன்றிய உயர்குலப் பாவை உமாதேவி. அவள் குழல் கருகருவென்றிருக்கிறது. அப்பனுடைய சடை சிவப்பு. அம்மையுடைய குழல் கறுப்பு. இறைவன் தலைமேல் கோலமதியை வைத்திருக்கிறான். ஆகையால் அதன் ஒளியில் அவன் தலையிற் சூடிய கொன்றை நன்றாகத் தெரிகிறது.

பெண்களின் கூந்தலுக்குப் பலவகை உவமைகளைப் புலவர்கள் சொல்வார்கள். கருமணலைப் போல இருக்கிறதென்பார்கள்; மேகத்தை உவமை கூறுவார்கள்; பாசியை ஒத்திருக்கிற தென்பார்கள்; இருளைப் போல இருககிறது என்றும் சொல்வதுண்டு.

இப்போது காரைக்கால் அம்மையார் கவிதை உணர்வோடு தம் பார்வையை இறைவன்பால் செல்ல விட்டுக் கொண்டிருக்கிறார். அவனுடைய சடைக்கு எதை உவமை சொல்வது, அவன் முடியில் வைத்த நிலவின் கதிருக்கு எதை ஒப்பாக்குவது, இரண்டும் இணைந்ததற்குப்