பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

341

அவனுக்கு ஒற்றைக் கோடு கழித்தலைக் குறிக்கும் குறி என்றும், இரட்டைக் கோடு மிச்சத்தைக் காட்டும் குறியீடு என்றும் தெரியும். அதனால் அதை எப்படிப் படிக்க வேண்டுமோ அப்படிப் படிக்கிறான். முதல் வகுப்புப் பையன் படித்ததும் சரிதான்; ஆனால் அவன் குறியீட்டைப் புரிந்துகொள்ளாமல், நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் படிக்கிறான்; கணக்கை எழுதினவர்களின் நோக்கத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. மூன்றாம் வகுப்புப் பிள்ளையோ ஒற்றைக் கோட்டை ஒற்றைக் கோடாகவும் இரட்டைக் கோட்டை இரட்டைக் கோடாகவும் பார்த்தாலும், அவற்றைக் குறியீடுகளாகக் கொண்ட கருத்தை, அந்தக் குறியீடுகள் காட்டும் குறிப்பை உணர்ந்து கொண்டு படிக்கிறான். அதனால் அவனுக்குக் கணக்குப் புரிகிறது.

இறைவனுடைய கோயில்கள், வடிவங்கள் ஆகியவை அடையாளங்கள். அந்த அடையாளங்கள் அழகாகவே இருக்கின்றன. என்றாலும் அவற்றால் உணர்த்தப்படும் தத்துவங்களைத் தெரிந்துகொண்டால்தான் அவற்றின் அருமை பெருமை புலனாகும். இல்லாவிட்டால் பல சமயங்களில் குழப்பம் ஏற்படும். இந்த நுட்பத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதை அப்பர் சுவாமிகள் வலியுறுத்துகிறார்.

“குறிக ளும்அடையா ளமும் கோயிலும்
நெறிகளும்அவர் நின்றதோர் நீர்மையும்
அறிய ஆயிரம் ஆரணம் ஒதினும்
பொறியி லீர், உமக்கு என்கொல் புகாதவே”

ஆகவே, இறைவனுடைய திருக்கோலத்தில் உள்ளவற்றின் உள்ளுறையைத் தெரிந்து கொள்ள லேண்டும். காரைக்கால் அம்மையார் இவற்றையெல்லாம் நன்கு உணர்ந்து இறைவனுடைய திருமேனியில் உள்ளவற்றைப் பார்த்துப் பார்த்து மகிழறரிறார். அவர் உள்ளுறையாகிய தத்துவத்தை உணர்த்தவில்லை. அவர்