பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

சாசனம் முறிபடாது. அவரோடு ஒட்டிக் கொள்ளும் வரைக்கும் இந்த அடிமைத் தன்மை, ஆளான தன்மை மாறாது. அவரல்லாத பொருள்கள் அம்மையார் கண்ணிலேயே படாதவை. அவர் முதுகுக்குப் பின்னலல்லவா அவை இருக்ன்றன? பார்த்தாலும் தெரியாத உயரத்துக்கல்லவா அவர் வந்து விட்டார்?

இப்போது சொல்கிறார், ‘கொடி போன்ற சடையின் மேல் பகுதியாகப் பிளந்த திங்கட் பிளவைச் சூடும்’ அவரைத் தரிசித்தபோது முதலில் அவரை வருணிக்கக் கூடத் தோன்றவில்லை, “அதோ அதோ! அவர்!” என்றார்.

‘யார் அவர்? அவருக்கும் உங்களுக்கும் என்னதொடர்பு?’

“அவர் என் பிரபு; நான் அவருக்கு ஆள்.”

“எப்போது இந்த உறவு ஏற்பட்டது?”

“எப்போதுமே இந்த உறவு உண்டு ஆனால் நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்."

“என்ன தெரிந்துகொண்டீர்கள்?"

“ஏழு வகைப் பிறவி என்று சொல்லுவார்கள். அப்படி . வரும் பிறவிகள் இனி எத்தனை எடுத்தாலும் அவருக்கே நாம் ஆள் ஆவோம்.”

பணக்காரர்கள் கர்வத்தால், ‘நாம்’ என்று சொல்லுவார்கள் பக்தர்கள் பெருமிதத்தால், இறைவருக்கு ஆட்பட்டோம் என்ற பெருமையால், நாம் என்று தன்மைப் பன்மையில் சொல்லுவார்கள்.

நாம் ஆர்க்கும் குடியல்லோம்” என்று அப்பரடிகள் . சொல்லவில்லையா? அதே சுருதியில் பேசுகிறார் காரைக்கால் அம்மையார்.

அவர்க்கே எழுபிறப்பும் ஆள் ஆவோம்