பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

வரிசையாகப் பல முழுமதியங்கள் தோன்றுகின்றன. எங்கே பார்த்தாலும் முழுமதியங்கள்!

ஒரு பூரண சந்திரனைப் பார்த்தாலே எவ்வளவு அழகாக இருக்கிறது? காட்சிக்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது? வானம் முழுவதும் பல சந்திரர்கள். கண்கொள்ளாக்காட்சி; ஒரே அழகுக் கொள்ளை.

அங்கண் முழுமதியம் செக்கர் அகல்வானத்து
எங்கும் இனிது எழுந்தால் ஒவ்வாதே?

நாம் எல்லாம் எலும்பையும் எலும்புத் தலையையும் கண்டு பயப்படுவோம். மரணத்தை நினைப்போம். இறைவனிடம் ஈடுபட்ட அம்மையார், இறைவனுடைய அணிகலனாக அவற்றைக் காண்கிறார். அவற்றின் உள்ளுறையை உணர்ந்தவர் அவர். ஆகையால் அந்தக் காட்சியைக் கண்டு கண்டு கண் குளிர்கிறது. அவர் தலை மாலையையா பார்க்கிறார்? எங்கும் பூரண சந்திரன்கள் பல தோன்றுவதை அல்லவா பார்க்கிறார்? அவர் கண் ஏன் குளிராது?

அவர் உள்ளத்தில் உள்ள அன்பு நமக்கு இருந்தால் நாமும் அப்படிப் பார்க்கலாம். இறைவனுடைய நினைப்போடு இனிதாகக் காணலாம்.

இனி முழுப் பாட்டையும் பார்க்கலாம்.

அங்கண் முழுமதியம் செக்கர் அகல்வானத்து
எங்கும் இனிதுஎழுந்தால் ஒவ்வாதே?—செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.

[செம்மையான கண்ணையுடைய திருமாலைத் தன் பங்கில் உடையவனுகிய சிவபிரானுடைய செம்மையான சடாபாரத்தின்மேல் அணிகலனாக வைத்த தலைமாலை