பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345

தோற்றமளிக்கிற ஒப்பற்ற அழகு அழகிய இடத்தையுடைய பூரண சந்திரன்கள் செம்மை நிறமுடைய அகன்ற வானத்தில் எங்கும் இனிதாக உதயமானாற் போல உள்ளதல்லவா?

அம் கண்-அழகிய இடம்; செக்கர்-செம்மை; செக்கர் வானம், அகல்வானம் என்று கூட்டுக. ஒவ்வாதே-ஒவ்வாதோ; ஏ:வினா. செந்தாமரை போன்ற கண்ணுடையவனாதலின் செங்கண் திருமால் என்றார். “செங்கணவன்பால் திசைமுகன்பால்” என்பது திருவாசகம். தோன்றுவதாகிய ஓர் சீர்-ஒருவகையான அழகு என்றும் சொல்லலாம். சீர் ஒவ்வாதே என்று கூட்டி முடிக்க.]

அற்புதத் திருவாந்தாதியில் 52-ஆம் பாடல் இது.