பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54. காரின் வடிவம்


காரைக்கால் அம்மையார் இறைவனுடைய சடா பாரத்தினின்று தம்முடைய திருவிழியை எடுக்கவில்லை. அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார். இறைவனுடைய திருமுடியில் கொன்றை மலர் இருக்கிறது. அது பொன்னிறமுடையது; தளதளவென்று விரிந்து மலர்ந்திருக்கிறது.

கொன்றை மலரைப் பிரணவ புஷ்பம் என்று சொல்வார்கள். கேசரங்களோடு கூடிய அந்த மலர் ஓங்காரத்தைப் போலத் தோன்றுகிறதாம். ஆகையால் அதற்கு அந்தப் பெயர் வந்தது. அந்த மலரினுடைய தோற்றம் பிரணவத்தை நினைப்பூட்டுமானால் அது பெரிய சிறப்பு அல்லவா?

இறைவனுடைய சடாமுடியில் இத்தகைய சிறப்பு வாய்ந்த கொன்றை மலர் தழைத்து விளங்குகிறது. அது இயற்கையாகவே பொன்னிறமும் ஓங்கார மலர் என்ற பெயரும் அமைந்த சிறப்பைப் பெற்றிருக்கிறது. இப்போது இறைவனுடைய திருமுடிமேல் இருப்பதனால் அந்தச் சிறப்புப் பின்னும் மிகுதியாகிவிட்டது. சிறப்புப் பல நிரம்பப்பெற்று, ஆர்ந்து, கொன்றை மலர் தழைப்புற்று விளங்குகிறது.

சீர் ஆர்ந்த கொன்றை மலர்தழைப்ப.

இறைவன் திருமுடியில் கங்கை இருக்கிறது. அது எப்படி அங்கே வந்தது? வானுலகில் படர்ந்து ஓடிய ஆறு அது. அது தன் முன்னோர்களின் எலும்பு மேற் பாய்ந்தால் அவர்கள் நற்கதியடைவார்கள் என்று எண்ணி, பகீரதன்