பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

347

கங்கையை நோக்கித் தவஞ் செய்தான். கங்கை தோன்றி “என்னைத் தாங்குவார் யார்?” என்று செருக்கோடு கூறினாள். பகீரதன் சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்தான். இறைவன் தோன்றி அவனுக்கு அருள் செய்தான். கங்கை ஆரவாரத்துடன் வந்தபோது அதைத் தன் சடையில் தாங்கிக் கொண்டான். வானுலகத்தில் உலாவி வெள்ளமாக நீர் நிரம்பிய அந்த ஆறு இறைவனுடைய சடா பாரத்தில் அடங்கிவிட்டது; கங்கை வெள்ளம் சடைக்குள் அடங்கி நிற்கிறது. பிறகு அதைப் பூமிக்குச் சிறிது விட்டான் இறைவன்.

சிவபெருமான் திருமுடியில் கங்கை இருக்கிறது. அது சேணில் உள்ள வானுலகத்தில் உலவி நீர் நிரம்பிய ஆறு. இப்போது அந்த வெள்ளம் இங்கே தேங்கி நிற்கிறது.

“சேண் உலவி
நீர்ஆர்ந்த பெரியாறு நித்தமாய்”

சிவபெருமான் சடைக் கற்றையையும் அதில் அவன் புனைந்திருக்கும் கொன்றை மலரையும் அங்குள்ள கங்கா நதியையும் அம்மையார் பார்க்கிறார். அவருக்குக் காட்டில் உள்ள கொன்றை நினைவுக்கு வருகிறது. அந்தக் கொன்றை கார்காலத்தில்தான் மலரும்.

“கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்” என்று சங்கநூல் கூறுகிறது. கார் காலத்தில் மழை பெய்யும். வெள்ளம் ஓடும். கொன்றையும் நீர்வெள்ளமும் கார்காலத்துக்குரிய அடையாளங்கள்.

இறைவனுடைய சடை பொன்னிறமுடையது. அந்தச் சடையைப் பாம்பைக் கயிறாகக் கொண்டு கட்டியிருக்கிறான். யாரையேனும் கண்டால் சீறும் பாம்பை வசப்படுத்திச் சடையைக் கட்டும் கயிறு போலச் செய்திருக்கிறான். கட்டு சடைக்குள் கொன்றை மலரும் நீர்