பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



55. எங்கு ஒளித்தாய்?


இந்த நாட்டில் பலவேறு மூர்த்திகளை வழிபடுகிறவர்கள் இருக்கிறார்கள். அவ்வாறு வழிபடும் பல சமயத்தர்களையும், ஆறு வகையாக்கி ஷண்மத ஸ்தாபனம் செய்தார் ஆதி சங்கரர். விநாயகரைத் தலைமைத் தெய்வமாக வைத்து வழிபடும் காணாபத்தியம், முருகனை முதல்வனாக வைத்துத் தொழும் கெளமாரம், சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்கும் சைவம், சக்தியைப் பரதேவதையாகக் கொண்டு உபாசிக்கும் சாக்தம், விஷ்ணுவை யாவருக்கும் மேலாக வைத்து வணங்கும் வைணவம், சூரியனை வழிபடும் செளரம் என்று ஆறு சமயங்களை வகுத்து வழிமுறைகளை அமைத்தார்அந்தப் பெருமான்.

இவ்வாறு ஆறு மூர்த்திகளை வழிபடுவர்கள். இருந்தாலும் பெரும்பாலும் சைவம், வைஷ்ணவம் என்ற இரண்டுமே எங்கும் பரவியிருக்கின்றன. சிவன், திருமால் இருவருக்கும் தனித்தனியே உள்ள ஆலயங்களே இந்த நாட்டில் மிகுதி. வடநாட்டில் வைஷ்ணவம் மிகுதி: தென்னுட்டில் சைவம் மிகுதி.

தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் உள்ள மக்களை, நீங்கள் என்ன மதம்?' என்று கேட்டால் ஒன்று சைவம் என்று சொல்வார்கள்; அல்லது வைஷ்ணவம் என்று சொல்வார்கள். பத்திரங்களை எழுதும் போதும், சிவமதம், விஷ்ணுமதம் என்று எழுதும் பழக்கம் இங்கே நெடுநாளாக இருந்து வருகிறது. ஒவ்வோர் ஊரிலும் சிவ விஷ்ணு ஆலயங்கள் இருக்கின்றன. இன்ன இடத்தில் சிவாலயமும் இன்ன இடத்தில் திருமால் கோயிலும் இருக்கும்