பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352

வேண்டும் என்ற வரையறை நகர நிர்மாணத்தில் இருக்கிறது.

பல ஊர்களில் இரண்டு கோயில்களையும் ஒரு குழுவே பரிபாலித்து வரும். சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று சம்பிரதாயத்தில் பிரிவு இருந்தாலும் இரு சாரார்களிடத்தும் ஒற்றுமை நிலவும். தங்கள் தங்கள் வழிபடு தெய்வத்திடம் பக்தி இருக்க வேண்டுமென்றும், அதற்காக மற்றத் தெய்வங்களை இழிவு செய்யக்கூடாதென்றும் பெரியோர்கள் வற்புறுத்துவார்கள். "தெய்வம் இகழேல்' என்று ஒளவையார் பாடியிருக்கிறார்.

சைவ வைஷ்ணவ சமரச உணர்ச்சி பரவுவதற்காக எத்தனையோ வழி வகைகளையும் அமைப்புக்களையும் இந்த நாட்டில் அமைத்திருக்கிறார்கள். "அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு" என்று ஒரு பழமொழியே இருக்கிறது.

பல ஊர்களில் ஒரே ஆலயத்துக்குள் சிவபெருமான் சந்நிதியும் திருமால் சந்நிதியும் இருக்கும். சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதியும் கோவிந்தராஜர் சந்நிதியும் ஒரே கோயிலுக்குள் இருக்கின்றன. அப்படி உள்ள ஆலயங்கள் பல.

இதையன்றிச் சிவபெருமானும் திருமாலும் இணைந்து ஒன்றிய மூர்த்தியைச் சங்கர நாராயணர் என்று வணங்குகிறார்கள். சங்கர நாயனார் கோயிலில் இந்த மூர்த்திக்குச் சந்நிதி இருக்கிறது. மாகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தில் இந்த மூர்த்தியும் ஒருவர். கேசவார்த்த மூர்த்தி என்பது திருநாமம். ஆழ்வார்களும் சிவபிரானைத் திருமால் வலப் பாகத்தில் கொண்டிருக்கிறார் என்று பாடி யிருக்கிறார்கள்.

"பிறைதங்கு சடையானை வலத்தே வைத்துப்
பிரமனைத்தன் உந்தியிலே தோற்று வித்துக்