பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

353

கறைதங்கு வேல் தடங்கண் திருவை மார்பில்
கலந்தவன்தாள் அணைகிற்பீர்; கழுநீர் கூடித்
துறைதங்கு கமலத்துத் துயின்று கைதைத்
தோடாரும் பொதிசோற்றுச் சுண்ணம் நண்ணிச்
சிறைவண்டு களிபாடும் வயல்சூழ் காழிச்
சீராம விண்ணகரே சேர்மின் நீரே'

என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்தார்.

"தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்நாணும் தோன்றுமால்—சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்
கிரண்டுருவும் ஒன்றாய் இசைந்து'

என்பது பேயாழ்வார் திருவாக்கு.

சிவபெருமானும் திருமாலும் ஒருவரே என்று கூறும் பாடல்கள் சைவத் திருமுறைகளிலும் உண்டு; திவ்யப் பிரபந்தத்திலும் உண்டு. 'முனியே நான்முகனே முக்கண் அப்பா' என்பது திவ்யப் பிரபந்தம்.

நாரணன்காண்நான்முகன்காண்*நால்வேதன்காண்

என்பது தேவாரம்.

இவ்வாறு ஒருவராயும், பாதிப்பாதி இணைந்த ஒருவராயும் இரண்டு மூர்த்திகளையும் வைத்துப் பாடுவதோடு, இருவரையும் வேறுவேறாக வைத்துப் பாடுவதே பெரும்பான்மை: சைவர்கள் சிவனைத் திருமால் அடியான் என்றும் வைணவர்கள் திருமால் சிவனுக்கு அடியார் என்றும் சொல்லிப் பெருமைப்படுவது உண்டு.

சிவபுராணங்க்ளைப் பார்த்தால் சிவனே பரம்பொருள் என்றும், திருமால் அவனைப் பூசித்து வழிபட்டார் என்றும் கூறும். வைஷ்ணவ புராணங்களைப் பார்த்தால் விஷ்ணுவே பரப்பொருள் என்றும், சிவபெருமான்

நா--23