பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/360

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

அவருக்கு அடியலன் என்றும் சொல்லும், சிவபுராணத்தைப்பழுத்த சைவர் பாடினார் என்று இருந்தால் அப்படிப் பாடியது இயல்பே என்று சொல்லலாம். ஆனால் இருவகைப் புராணங்களையும் இயற்றியவர் ஒருவரே வியாசபகவானே பதினென் புராணங்களையும் இயற்றியுள்ளார். முதலில் சிவபுராணங்களைப் பாடிவிட்டுப் பிறகு தெளிவு பிறந்து வைஷ்ணவ புராணங்களைப் பாடினார் என்று சொல்வதற்கில்லை. இரண்டையிம் ஒருவரே பாடிய போது இப்படி வேறுபாடு இருக்கலாமா என்று தோன்றுகிறது.

இரண்டு புராணங்களையும் படித்தவர்கள் இரண்டும் பேருமே முதல்வர்கள் என்று முடிவுக்கு வருவார்கள். பரமதெய்வம் ஒன்றாகத்தானே இருக்க முடியும்? அப்படியானால் இரண்டு தெய்வங்கள் என்பது தவறு அல்லவா? ஒருவரே இருவேறு உருவங்களில் நின்று முதன்மை பெறுகிறார்கள் என்று கொண்டால் இந்த முரண்பாட்டுக்கு இடமே இராது. "ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி" என்ற சுருதி வாக்கியமும் இதைத்தானே சொல்லுகிறது?"

இன்னும் ஒரு வகையில் இந்தப் புராணச் செய்திகளுக்குரிய சமாதானத்தைச் சொல்லலாம்.

இரண்டு சகோதரர்கள் நாடகத்தில் நடிக்கிறார்கள். திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் தமையனார் அரசனாகவும், தம்பி வேலைக்காரனாகவும் நடிப்பார்கள் ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனிக் கிழமைகளில் தம்பி அரசனாகவும், தமையனார் வேலைக்காரனாகவும் நடிப்பார்கள். ஓர் ஊரில் உள்ள ஒருவர் திங்கட்கிழமையன்றுதான் ஓய்வுள்ளவர். அவர் அன்று நாடகம் பார்ப்பார். தமையனாரே, அரசனென்றும், தம்பி வேலைக்காரனாகவே நடிப்பாரென்றும் எண்ணிக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் ஞாயிற்றுக்கிழமை நாடகம் பார்க்கிறவர், அவர்