பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

355

தம்பிதான் அரசவேஷம போடுகிறவரென்றும் மூத்தவர் வேலைக்கார வேஷமே போடுகிறவரென்றும் நினைத்தார்.

இவர்களுக்குப் பண்டிகை நாட்களில் ஒய்வு இருந்ததால் வழக்கமாகப் போகாத மற்ற நாட்களில் ஒன்றில், நாடகம் பார்க்கப் போனர்கள். அப்போது தெரிந்தது உண்மை. இரண்டு சகோதரர்களும் எப்படி வேண்டுமாறும் வேஷம் போடுவார்கள். அவர்கள் சமமானவர்கள் இரண்டு வேஷங்களுமே போடுவார்கள்’ என்ற உண்மையைத் தெரிந்து கொண்டார்கள்.

சிவபெருமானும் திருமாலும் இப்படித்தான் நாடகம் ஆடுவார்கள். அதைக் கண்டு ஏமாந்து போகக் கூடாது,

திருமாலும் சிவபெருமானும் ஒருவரே என்றும், சிவபெருமான் இடப்பாகத்தில் திருமால் இருக்கிறாரென்றும், சிவபெருமானக் காணாமல் திருமால் தேடினாரென்றும் சிவபக்தர்கள் பாடிக்கிறார்கள், இந்த மூன்றும் உண்மையாக வேண்டுமானல் அவர்கள் வேறாக நின்று திருவிளையாடல் புரிவது நாடகம் என்றே கொள்ள வேண்டும்.

காரைக்காலம்மையார் இந்த மூன்று நிலைகளில் பப்பாதியாய் நின்ற தன்மையையும் திருமாலுக்கு ஒளித்து நின்றதையும் எண்ணிப் பாடுகிறார்.

இறைவனுடைய நீலகண்டத்தை அடிக்கடி நினைத்து உருகுவது அம்மையார் இயல்பு என்பதைப் பல முறை பார்த்திருக்கிறோம். அந்தக் கண்டம் நஞ்சுண்டு கறுத்திருக்கிறது. அந்தக் கருமை அவனுடைய கருணைக்கு அடையாளமாக இருக்கிறது. அது தேவர்கள் உயிரைக் காப்பாற்றியது. அதை நினைக்கும்போது பயிரைக் காப்பாற்றும் கருமேகந்தான் உவமையாகத் தோன்றுகிறது. மழை முகிலனைய திருமேனியையுடைய திருமாலைப் பற்றிச் சொல்ல வருகிறவருக்கு முகிலே இறைவன் திருக்கழுத்துக்கு உவமையாக்கும் எண்ணம் உடனே தோன்றுகிறது.