பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

361

தேமலைக் கீழே விழுந்த காயத்தின் வடுவென்று எண்ணி அங்கலாய்க்கும் தாயைப் போல இப்போது ஒன்றைச் சொல்கிறார்.

அம்மையார் அடிக்கடி இறைவனுடைய நீலகண்டத்தை நினைத்து உருகுவதை முன்பும் பார்த்தோம்; இனியும் பார்க்கப் போகிறோம். இப்போது அந்த நீலகண்டத்தை எண்ணிப் பாடுகிற ஒன்றைப் பார்க்கலாம்.

இறைவனுடைய கண்டம் எப்படிக் கறுத்தது அது பழைய கதை. அதை இப்போது அம்மையார் நினைவு கூர்கிறார். அமரர்கள் எல்லாம் பாற்கடலைக் கடைந்தார்கள். அமுதை எடுத்து உண்டு சாவா மூவாப் பெருவாழ்வு பெறவேண்டும் என்பது அவர்களுன்டய ஆசை. பாற்கடலை முப்பத்து முக்கோடி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்தார்கள். ஒரு பெரிய காரியம் செய்வதற்கு தம்முடைய தலைவனிடம் சொல்லி உத்தரவு பெற்றுச் செய்தால், அது நன்றாக நிறைவேறும். அமரர்களோ எல்லாத் தேவர்களையும் மூர்த்திகளையும் அழைத்துச் சென்றார்களேயன்றிச் சிவபெருமானிடம் ஒன்றும் தெரிவிக்கவில்லை.

பாற்கடலைக் கடைந்தபொழுது உடனே அமுதம் உண்டாகவில்லை. ஐராவதம், உச்சைசிரவம் என்று பல பொருள்கள் எழுந்தன. அவற்றை அவரவர்கள் எடுத்துச் கொண்டார்கள். அப்பால் ஆலகால விஷம் எழுந்தது. அது தோன்றியபோதே அதன் காற்றுப்பட்டு யாவரும் மயங்கி விழுந்தனர். மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் அவர்களுக்குச் சிவபெருமான் நினைவு வந்தது. ஓடிச் சென்று அவன் காலில் விழுந்து ஆலகால நஞ்சிலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று முறையிட்டார்கள். சிவபெருமான் உடனே அந்த நஞ்சை வாங்கி உண்டான். அது அவன் கழுத்திலலே நின்று