பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

விட்டது. இறைவன் திருக்கழுத்து நீலகண்டமாயிற்று. இறைவனுக்கு நீலகண்டன் என்ற திருநாமம் அமைந்தது.

பழைய காலத்தில் அமரர்கள் எதைக் கண்டு அஞ்சினார்களோ, அந்த நஞ்சை, பாற்கடலில் எழுந்த விஷத்தை உண்டு அதனால் இறைவன் கண்டம் கறுத்தது. இது அம்மையார் அடிக்கடி நினைப்பூட்டிக் கொள்ளும் செய்தி.

பண்டுஅமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு
கண்டம் கறுத்தது,

அந்தக் கறுப்பு வடுமாத்திரமா? இதோ இன்னும் ஒரு வடு இருக்கிறது போல் இருக்கிறதே! கழுத்தளவில் நின்றுவிட்டட நஞ்சு என்றல்லவா நினைத்தோம்? அந்த நஞ்சு தலைக்கும் ஏறி அதற்கு மேலும் போய் விட்டது போல் இருக்கிறதே? என்ற எண்ணம் இப்போது அம்மையாருக்கு எழுகிறது. ஏன்?

இப்போது நிதானமாக இறைவனுடைய திருமுடியைப் பார்த்தார். சிவந்த சடையே அவனுக்கு முடியாக இருக்கிறது. அது நீண்ட சடை; வார்சடை; சிவந்த சடை; செஞ்சடை. அந்த வார்செஞ்சடையில் பாம்பை அணிந்துகொண்டிருக்கிறான் இறைவன். காட்டில் மனம் போனபடி விளையாடுவது போல அந்தப் பாமபுகள் அங்கே உலாவுகின்றன. அதே சடையில் சிவபெருமான் மதியைச் சூடியிருக்கிறான். அது வெள்ளைவெளேரென்று பால் போல் ஒளிவிடுகிறது; பால்மதியாக விளங்குகிறது.

அந்த மதியை உற்றுக் கவனிக்கிறார். இறைவன் சடையில் பிறைச் சந்திரன் இருக்கிறது. அம்மையாருக்கு அது முழுமதியமாகக் தோன்றுகிறது. இறைவன் ஆடும் போது அந்த ஆட்டச் சுழற்சியிலே அது வட்ட வடிவமாகத் தோன்றுவதும் உண்டு. இப்போது அம்மையார்