பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

பூதலத்தோர் தம்மைப் பொருள்நசையால் பாராவாம்
காதலித்துத் தாழ்ந்திரப்போர் கண்”

என்பது ஒரு பழம் பாடல். பொருள் செலவழிவது. அப்படியிருந்தும் செலவு செய்யச் செய்யச் குறையாத செல்வத்தைப் பொருள் படைத்த வள்ளல்கள் கொடுப்பார்கள் என்றால், என்றும் அழியாத அருளைக் கொடுக்கும் சிவபெருமான், இன்னும் ஒருவரிடம் சென்று கை நீட்டும்படியா வைப்பார்?

ஆகவே, காரைக்காலம்மையார் சொல்கிறார்: “அவருக்குத்தான் நாம் அன்பாவோம்” என்றவர், “வேறு யாரிடமும் போகமாட்டோம்” என்று சொல்ல வருகிறார். சிவபெருமானுக்கு ஆளாகி விட்டால், வேறு ஒருவரிடமும் போக மனம் வருமா? அவசியந்தான் ஏது?

“வேறு யாரிடமும் போய் ஆளாக மாட்டீர்களா?”

இப்போது அம்மையார் அவர்தம் எசமான், தலைவர் யார் என்பதை அடையாளத்தோடு சொல்லி, “மற்றவர்களுக்கு எந்தக் காலத்திலும் ஆளாகப் போவதில்லை” என்று உறுதியாக அடித்துப் பேசுகிறார்.

“அவருக்கே அன்பாவதன்றி, கொடி போன்ற சடையின் மேல் துண்டாகத் திங்கள் பிளவைச் சூடுகின்ற அந்தப் பெருமானுக்கல்லாமல் வேறு ஒருவர்க்கு ஆளாவது இனி எந்தக் காலத்தும் இல்லை. எந்த நாளும் அவருக்சுே ஆளாகக் கழியும்; அன்றி வேறு யாருக்கும் ஆளாகாமலே அந்த நாட்கள் போகும்.”

“........அல்லால்—பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்(கு) அல்லால் மற்றெருவர்க்(கு)
ஆகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

 

நா.—2