பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

பாலைப் போல வெளுப்பான சந்திரனுக்குள்ளே, நீலமணியின் நிறத்தைப் பெற்ற மறுவென்ற வடிவில் தோன்றும் வடுவும் உண்டு.

அஞ்சப்படு நஞ்சு கடல் நஞ்சு. அஞ்சப்படு—அஞ்சுதற்குக் காரணமான படுகடலில்—ஆழமான கடலின் என்றும் பொருள் கொள்ளலாம். கண்டம்—சிவபெருமானுடைய கழுத்து. பணி—பாம்பு. வார்—நீண்ட. மணிமறு—நீலமணியின் நிறத்தைப் பெற்ற கறை. வடு—அடையாளம்; கறுப்பான வடு. வடு உண்டு; வடுவும் என்பதில் உள்ள இறந்தது தழீஇய எச்சவும்மை தொக்கது.]

பாம்பு விஷமுடையதாதலால் அதை நஞ்சு ஒன்றும் செய்யாது. சந்திரனைத்தான் அது மாற்றியது. வெளுப்பான சந்திரனில் கறுப்பானவடு நன்றாகத் தோன்றுகிறது.

காரைக்காலம்மையார் தாயன்போடு பாடிய இந்தப் பாட்டு அற்புதத் திருவந்தாதியில் 55- ஆம் பாடலாக அமைந்திருக்கிறது.