பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

என்று சொல்வது ஒரு வழக்கு. அதனால் விதியைத் தலையெழுத்து என்று சொல்லும் வழக்கம் உண்டாயிற்று. கபாலத்தைத் தலைகீழாக்கி ஏந்துகிறான் இறைவன். ‘உங்கள் தலையில் எழுதுகிறவன் கபாலமே என் கையில் இருக்கிறது. அதையே நான் நிமிர்த்தி வைத்திருக்கிறேன். என்ன வழிபட்டவர்களுக்குப் பிரமனால் தீங்கு வராது. அவன் அவர்களைப் பிறக்கச் செய்ய மாட்டான். அவர்கள் தலையில் எழுத வேண்டிய நிலை அவனுக்கு இராது’ என்பதையே கபாலியாக இருந்து காட்டுகிறான் இறைவன்.

அவனுக்குத் தாருகாவனத்து மகளிர் பிச்சையிட்டார்கள். அந்தக் கபாலத்தினுள்ளே ஊணை வாங்கினான். ஆனால் அந்த ஊனை அவன் உண்கிறானா? அப்படி உண்டதாக யாரும் சொல்லவில்லை. தேவர்கள் அமுதை உண்ணும்படி அநுக்கிரகம் செய்த அவன் அதில் ஒரு துளியை உண்ணவில்லை. அவர்கள் பிழைப்பதற்காக ஆலால விடத்தை உண்டான்; அதையும் உண்டான் என்று சொல்ல முடியாது. அது வயிற்றுக்குள் போகவில்லை. அதைத் தன் கழுத்திலே நிறுத்திக்கொண்டான்.

ஆகவே, அவன் நஞ்சையே உண்ணவில்லை; இந்தப் பிச்சைச் சோற்றை உண்ணுவானா?

பிச்சை வாங்கி உண்டால்தான் குற்றம்; வடு; பழி. பிச்சை வாங்கும் கோலத்தில் அவன் அன்பர்களுக்கு அநுக்கிரகம் செய்யப் போகிறான்.

ஆனாலும் புறங்கூறுகிறவர்களை எப்படி அடக்குவது? காரைக்காலம்மையார் யோசனையில் ஒரு கருத்துக் தோன்றுகிறது.

பகல் வேளையில் பிச்சையெடுப்பதை எல்லோரும் காண்பார்கள். அப்படி ஒருவரும் கண்டார் இல்லை. பகலில் வாங்கின பிச்சையை இரவிலே உண்ணுகிறனோ? இப்படி யாராவது எண்ணிப் புறம்பேசி, வடு