பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

372

எலும்பு மாலையும் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. அவற்றின் தோற்றம் மரணத்தையும் சுடுகாட்டையும் நினைப்பூட்டிப் பயத்தை உண்டாக்கும்.

அவற்றைக் கண்டும் அஞ்சாமல், ‘பாவம்! யாரோ பெரியவர் பிச்சை கேட்கிறார்’ என்று மனம் இரங்கி பிச்சையிட்டாலும் இடலாம். ஆனால் மற்றொன்று இருக்கிறதே, அதைக் கண்டால் அஞ்சாமல் இருக்க முடியுமா? ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ என்பார்கள். படையில் பலசாலிகளாகிய வீரர்கள் இருப்பார்கள். அவர்களே பாம்பைக் கண்டு அஞ்சுவார்களானால் அபலைகளாகிய பெண்கள் பயந்து நடுநடுங்கி விடுவார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? நஞ்சு மிக்க நாகப்பாம்பை ஆண்டவன் அணிந்திருக்கிறான். அது படம் எடுத்துச் சீறி ஆடுகிறது. அதைக் கண்டால் பெண்கள் நடுங்கி ஓடி ஒளிந்து கொள்வார்களே! அப்புறம் இறைவனுக்குப் பிட்சை எங்கே கிடைக்கும்?

இவற்றை எண்ணிக் காரைக்காலம்மையார் இறைவனுக்கு ஓர் அறிவுரை கூறுகிறார். தாயின் நிலையில் இருந்துகொண்டு அதைக் கூறுகிறார். அழுக்கான உடைகளை அணிந்து கொண்டு வேலைதேடிப்போகும் மகனை பார்த்து, “இப்படிப் போகாதே அப்பா! இந்த அழுக்கு உடைகளைக் களைந்து விட்டு நல்ல ஆடையாக அணிந்து செல்” என்று தாய் கூறுவதைப் போல அமைந்திருக்கிறது அம்மையார் கூற்று.

இறைவனைப் பார்த்து அவர் கூறத் தொடங்குகிறார்: ‘எம்பெருமானே, நீ பிச்சை எடுப்பது தவறுதான். அதைப்பற்றிச் சொல்லிப் பயன் இல்லை. கண்ட கண்ட இடத்திற்குப் போகாமல் இன்ன இடத்துக்கு மட்டும் போ என்று வரையறை சொல்ல வரவில்லை. உன் விருப்பப்படியே இந்த உலகம் எல்லாம் சென்று இரந்து வா. ஆனால் ஒன்று சொல்கிறேன்; அப்படிச் செய். அப்போது