பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

373

தான் உனக்குப் பிச்சை கிடைக்கும். என்ன செய்ய வேண்டும் தெரியும்? நீ மிகவும் கொடிய, கெட்ட பாம்பை அணிந்திருக்கிறாய். அதைக்கழற்றி வைத்துவிட்டு எங்கு வேண்டுமானலும் போ.

நீ உலகம் எல்லாம் இரப்பினும்–நின்னுடைய
தீய அரவுஒழியச் செல்கண்டாய்.

‘ஏன் தெரியுமா? உனக்குப் பிச்சையிட வருகிறவர்கள் பெண்கள். அவர்கள் மிகவும் தூயவர்கள். நீ பாம்பை அணிந்துகொண்டு போனால் அது சும்மா அமைதியாக இராது. உன் மேலே தவழ்ந்து மிகுதியாக ஆடும். அதைக் கண்டால் அவர்கள் பயப்படுவார்கள். உன்னுடைய குரலைக் கேட்டுக் கையில் பிட்சையை எடுத்துக்கொண்டு வருவார்கள். சிறிது தூரம் வந்தவுடன் புஸ் என்று சீறி ஆடும் பாம்பைக் கண்டவுடன் அப்படியே உள்ளே ஒடிவிடுவார்கள். உன்னிடத்தில் வந்த பிறகு தானே பிச்சை போடவேண்டும்? அருகிலே வரமாட்டார்களே! கொண்டு வந்த பிச்சையையும் போடமுடியாது. நீ எதற்காகப் போகிறாயோ அந்தக் காரியம் பலிக்காது. அவர்கள் பிச்சையிட வேண்டும் என்ற நல்ல எண்ணம் உடையவர்கள்; தூய மனம் உடையவர்கள். பிச்சைப் பொருளைக் கையில் எடுத்து வந்தும் போடாமற் போனதற்கு அவர்கள் இயல்பு காரணம் அன்று. உன்னுடைய செயலே காரணம். உன்னுடைய அருமையான ஆபரணந்தான் காரணமாக இருக்கும். ஆகவே நான் சொல்கிறபடி செய்.

தூய

மட வரலார் வந்து பலிஇடார், அஞ்சி
விட அரவம் மேல்ஆட மிக்கு.

‘அவர்கள் பிச்சையிட வேண்டும்’ என்ற எண்ணத்தோடு இருந்தும் அந்தப் பாம்பைக் கண்டு