பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376

சிவபெருமானிடம் அவனருளே சக்தி வடிவமாக இருக்கிறது.

“அருளது சத்தி யாகும் அரன் றனக்கு”

என்று சாஸ்திரம் கூறுகிறது. சிவபெருமான் திருவுருவத்தில் நூற்றுக்கு நூறு பங்கு அருள் நிரம்பியிருக்கிறது. சக்தனாகிய அவன் வடிவத்துக்குச் சமானமான அளவில் சக்தி இடம்பெற்றிருக்கிறாள் என்பது இந்தக் கருத்தையே காட்டுகிறது.

திருஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதிடச் செல்லும்போது சிவபெருமானுடைய கருணையை வேண்டுகிறார். அவரை மாதிருக்கும் பாதியனாக எண்ணி வணங்குகிறார்.

“வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதம் இல்லி அமணோடு தேரறை வாது செய்தழிக் கத்திரு வுள்ளமே, பாதி மாதுடன் ஆய பரமனே”

இவ்வளவு சிறப்புடைய பாதிமாதுடனாகிய பரமனை இப்போது நினைத்துப் பார்க்கிறார் காரைக்கால் அம்மையார்.

சிவபெருமான் அந்திவானத்தில் தோன்றும் செந்நிறம் போன்ற திருமேனியை உடையவன். “சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனியம்மான்” என்று திருநாவுக்கரசர் பாடுவார். அம்மையார்,

செக்கர்போல் ஆகத்தான்.

என்கிறார். செக்கர்-அந்திச் செவ்வானம், அவனுடைய சடாபாரமும் சிவப்புத்தான். நெருப்புக் கொழுந்து போல அது தோன்றும். மிகுதியாக நெருப்பு எரியும் போது சடசட என்ற ஒலி எழும்பும். அப்போது அதன் ஜ்வாலை மேலே துள்ளி எழும்; தீக்கொழுந்து என அதைச் சொல்வார்கள். சிவபெருமானுடைய திருமேனியைக் கண்டு அவன் சடைமுடியைப் பார்த்தால் எரி மிக்கு,