பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

382

பண்பு உணர மாட்டாதேன்
நீயே பணித்துக்காண்.

இறைவன் தருமமாகிய இடபத்தின்மேல் ஊர்ந்து வருகிறவன்; தன் அடியார்கள் உள்ள இடங்களுக்கு தானே வலியச் சென்று அருள் பாலிப்பவன். விடையில் எழுந்தருள்வதன் நோக்கமே அதுதான். அவன் ஆன் ஏற்றை, காளையை, உணரும் எண்ணம் இடையிலே வருகிறது. தருமத்தை அவன் தாங்குகிறான்; பாதுகாக்கிறான். அவனைத் தருமமே இடபமாக வந்து தாங்குகிறது.

ஆன் ஏற்றாய்!

என்று மீண்டும் விளித்துச்சொல்கிறார்.

இறைவன் இறைவியைத் தன் இடப்பாதியில் கொண்டிருக்கும் கோலம் ஒன்று உண்டு. மாதிருக்கும் பாதியன் அவன்; அர்த்தநாரீசன். அப்படியே இரண்டு பாதி இணைந்த வேறு ஒரு கோலமும் உண்டு. அதே இடப்பாகத்தில் திருமாலை வைத்திருக்கும் மூர்த்தம் ஒன்று உண்டு. சங்கரநாராயண மூர்த்தி, கேசவார்த்த மூர்த்தி என்றும் அந்த மூர்த்தியை வழங்குவார்கள். அர்த்த நாரீசுவரத் திருக்கோலத்தைத் திருச்செங்கோட்டில் காணலாம். கேசவார்த்த மூர்த்தியைச் சங்கரநயினர் கோயிலில் தரிசிக்கலாம்.

இறைவன் தனியே இருக்கும் போது அவனுடைய திருமேனி முழுவதும் சண்ணித்த வெண்ணீறு ஒளிரும். நெற்றியில் நீறு, மார்பில் நீறு, உடம்பெங்கும் திருநீறு தான். அவனுடைய அடியார்களில் முழு நீறு பூசிய முனிவரென்று ஒரு கூட்டத்தினர் உண்டு.

தனியாகக் கோலங்கொண்டு திருநீறை நிறையப் பூசும் இறைவன் அம்பிகையோடு இணைந்து மாதிருக்கும் பாதியனாக இருக்கும் போது அந்தக் கோலம் முழுதும் திரு