பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

384

வுருவமோ, திருமாலோடு இணைந்த போது அந்தத் திருமாலின் பகுதியோ எவ்வுருவம் திருநீற்றை அணிவது?

மாட்டாதேன்—யான் ஆற்றல் பெறாதவன் பணித்துக் காண்: காண் என்பது அசை; அதற்குப் பொருள் இல்லை; பணிப்பாயாக என்பதே பொருள். நின் உருவமேல்—நீ கொண்டருளும் பல வகை உருவங்களுக்குள்; மேலென்பது இல் என்னும் ஏழாம் வேற்றுமை உருபாக நின்றது; கீழ் என்பதற்கு மாறான, மேலிடம் என்று கொள்ளக்கூடாது. அவ்வுருவோ, மாலுருவோ என்பவற்றிலுள்ள ஓகாரம் வினா. எவ்வுருவோ என்பதில் எகரமே வினாப் பொருளைத் தருவதால், ஓகாரம் அசை.

‘கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா, ஆன் ஏற்றாய் நின் உருவமேல், பெண் புணரும் அவ்வுருவோ, மால் உருவோ? பண்பு உணர மாட்டாதேன்; நீயே பணித்துக் காண்’ என்று அந்வயம் செய்து பொருள் கொள்ள வேண்டும்.]

இது அற்புதத் திருவந்தாதியில் 59-ஆவது பாடல்.