பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

386

கஜாசுரனைச் சங்காரம் செய்தது ஒரு வீரச்செயல். யானை வடிவில் வந்த அசுரனால் உலகத்துக்குப் பெருந்தீமை விளைந்தது. அதைப் போக்க அவனை அழித்து அவன் தோலைப் போர்த்துக்கொண்டான் இறைவன். அகங்காரத்தை யானையாக உருவகம் செய்வர். அகங்காரத்தைப் போக்குபவன் என்ற கருத்தை அந்த வீரச்செயல் புலப்படுத்துகிறது. யானைத்தோலைப் போர்த்தவன் என்று அன்பர்கள் அடிக்கடி பாடுவார்கள். அதனால் கிருத்திவாஸன், என்ற திருநாமம் சிவபெருமானுக்கு அமைந்தது. இந்தப் பராக்கிரமச் செயலை நினைப்பூட்டுவது மாயூரத்தின் அருகில் உள்ள வழுவூர் என்ற தலம். வழுவை என்பது யானைக்கு ஒரு பெயர். அதை உரித்துப் போர்த்ததை நினைவு கூரச் செய்யும் அந்தத் தலத்தின் பெயர் வழுவையூர்; அதுவே மாறி வழுவூர் ஆயிற்று.

யானை உரி போர்த்து விளங்கும் சிவபெருமான் திருக்கோலத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறார் காரைக்காலம்மையார். அந்தக் கோலத்துக்கு உவமை சொல்லப் புகுகிறார்.

அவனுடைய திருவுருவம் செம்பொன்னப் போல ஒளிர்கிறது. அவனுடைய பெரிய வடிவம் செம்பொன்னலான மலையைப் போலத் தோன்றுகிறது.

“பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும்”

என்று சேரமான் நாயனரும்,

"பொன்னர் மேனியனே"

என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடுவார்கள்.

அந்தப் பொன்மலை செவ்வண்ணக் கதிர்களை விசிக்கொண்டு நிற்கிறது. தேவர்கள் எல்லோரும் ஒளிபடைத்த