பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



388

அவ்வாறு யானையின் தோலைப் போர்த்துக்கொண்டு மிகப் பழங்காலத்தில் நின்றான்.

மால்ஆய
கைம்மா மதகளிற்றுக்,
கார்உரிவை போர்த்தபோது
அம்மான் திருமேனி அன்று.

அந்தக் கோலம் எப்படி இருக்கிறது? அதற்கு உவமை சொல்ல வருகிறார்.

ஒரு பொன்மலை. அது கண்ணைக் கூசும் ஒளியைப் பரப்பிக்கொண்டு நிற்கிறது. அதன் உயரத்தையும் பரப்பையும் ஒரே கண் கொண்டு பார்க்க முடிவதில்லை. அதன் மேலே படர்ந்து மிதந்து வந்த கரிய மேகங்கள் அந்த மலை முழுவதையும் மறைத்துக் கொண்டு நிற்கின்றன. இப்போது பார்த்தால் மேகங்கள் முதலில் தெரிகின்றன. சற்றுக் கூர்ந்து பார்த்தால் அந்த மேகங்களினூடே பொன்மலை தெரிகிறது. இப்போது கண் கூசுவதில்லை. அதை நன்றாகப் பார்க்கலாம்.

அத்தகைய நிலையில் உள்ள பொன்மலையைப் போல இறைவன் தோன்றுகிறான்.

மேலாய மேகங்கள்
கூடிஓர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால்
ஒவ்வாதே?

இறைவன் திருக்கோலக் காட்சிக்கு இது உவமையாகாதா! என்று கேட்கிறார் அம்மையார்.

இதற்குள் ஒரு கருத்துப் புதைந்து நிற்கிறது. நான் என்னும் அகந்தை ஒழிந்தால்தான் இறைவனுடைய