பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



389

காட்சி நமக்குக் கிடைக்கும். அந்த அகந்தையை நாமே நீக்கிக் கொள்ளலாம் என்று முயன்றால், நம்மால் முடியாத காரியம். அவன் திருவுள்ளம் கொண்டு அதை அழித்து அருள் புரிய வேண்டும். அப்போது அவனைக் காண முடியும். முதலில் அவனைக் காண முடியாமல் தடுக்கும் தடையை அவனே நீக்கிப் பிறகு தன்னைக் காட்டிக் கொள்கிறான். இந்தக் கருத்தை இந்தக் காட்சி காட்டுகிறது. தன் முழு ஒளியையும் காணக் கூசுபவர்கள் எளிதில் கண்டு நலம் பெறட்டும் என்று போர்வையைப் போர்த்துக் கொண்டு நிற்கிறான். அடியார்களுக்குத் தன்னைக் காட்டி நலம் செய்ய வேண்டும் என்ற பெருங்கருணையால் இப்படிச் செய்கிறான்.

மேலாய மேகங்கள்
கூடிஓர் பொன்விலங்கல்
போலாம் ஒளிபுதைத்தால்
ஒவ்வாதே?-மால்ஆய
கைம்மா மதகளிற்றுக்
கார்உரிவை போர்த்தபோது
அம்மான் திருமேனி அன்று.

[மயக்கமே தன் உருவாக வந்த துதிக்கையையுடைய விலங்காக, மதம்மிகுத்த யானையாக வந்த கஜாசுரனைச் சங்காரம் செய்து, அந்த யானையின் கரிய தோலை அந்தப் பழங்காலத்தில் இறைவன் போர்த்துக் கொண்ட போது, அவன் திருமேனி, மேலே படர்ந்த கரிய மேகங்கள் ஒன்றாகக் கூடி ஒரு பொன்மலையில் வீசிய மிக்க ஒளியை மறைத்தால் அமையும் காட்சியை ஒத்திருக்காதோ?

மேல் ஆய-மேலே படர்ந்த. பொன்விலங்கல்–பொன்மலை. பயணம் செய்பவர்களுக்குக் குறுக்கே தடுத்து நிற்பது போல இருப்பதலால் மலைக்கு விலங்கல் என்ற பெயர் வந்தது; விலங்கல்-தடுத்தல். அந்தத்