பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

390

தொழிற்பெயர் ஆகுபெயராய் நின்று மலைக்கு ஆயிற்று. போல்; அசை; அதற்குப் பொருள் இல்லை. பொன் விலங்கல் ஆம் ஒளி என்று கூட்ட வேண்டும். புதைத்தல்—மூடி மறைத்தல். மால்-மயக்கம். கைம்மா-யானை. கார்-கருமை. உரிவை-தோல். அம்மான்-இறைவன். அன்று-அந்தப் பழைய காலத்தில்; பண்டறி சுட்டு.

திருமேனி புதைத்த காட்சியை ஒவ்வாதோ என்றபடி.

இது அற்புதத் திருவந்தாதியில் வரும் 60-ஆவது திருப்பாடல்.