பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

393

அவ்வாறு இறைவனுடைய திருக்கோலங்களைக் கோயிலில் கண்டவர்கள், அன்பு மீதூர்ந்து உள்ளத்தில் தியானிக்கிறர்கள். அவர்களுடைய பக்குவக்திற்கு ஏற்றபடி பயன் உண்டாகிறது. உள்ளக் காட்சியில் ஒளி உண்டாகிறது. இறைவன் தன் வடிவத்தோடு நிற்கிறான். அருட்கண் உண்டாகிறது; அப்போது அருளாளர்கள் கண்ட காட்சியை அவர்களும் காணுகிறார்கள். பிறகு, சோதிவடிவமாகத் தரிசிக்கிறார்கள். வடிவம் மறைந்து உருவாகி, பிறகு அதனோடு கரைந்து தம்மை மறக்கிறார்கள்.

ஏணியில் இறங்கி வந்து கீழே இருப்பவனை மேலே ஏறச் சொன்னது போன்றது இது. இறைவன் அருவிலிருந்து உருவாகவும் வடிவாகவும் இறங்கி வருகிறான்; விக்கிரகமாகக் காட்சி அளிக்கிறான். விக்கிரகத்தைக் கண்டு அன்பு செய்தவர்கள் மெல்ல மெல்லப் படிகளில் ஏறி உரிய இடத்தை அடைவதைப் போல் இறைவனை அடைகிறார்கள். படிகளைச் சோபானம் என்பார்கள். கீழிருந்து மேலே ஏறும்போது பல படிகள் இருந்தாலும்நான்கு நிலைகளாகப் பிரித்துச் சொல்வது வழக்கம். அவற்றைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பர். சரியையும் கிரியையும் புறத்தில் நிகழும் செயல்கள். கோயிலை வலம் வருவது இறைவன் திருக்கோலத்தை வணங்கி வழிபடுவது முதலியவை சரியை. பிறர் பூசை பண்ணுவதைப் பார்த்து வணங்குவது இது. தாமே பூசை செய்வது கிரியை. புறத்தே செய்வதை உண்முகமாகச் செய்வது யோகம். மனம் அலையாமல் ஒருமைப்பட நிற்க உள்ளே இறைவனைத் தரிசிக்கும் நிலை இது. இதற்கு மேல் எல்லையிறந்த அநுபவத்தை அகண்டாகார விருத்தியில் தெளிவுற்று அமைவது ஞானம்.

சரியையிலும் கிரியையிலும் ஆண்டவனுடைய செயற்கை வடிவங்களைப் பார்க்கிறோம். அந்த வடிவங்கள் இறைவனே எடுத்த மூர்த்திகளின் சின்னங்கள்; போட்டோக்களைப் போன்றவை. யோகத்தில் அவனுடைய