பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. என்ன காரணம்?


இறைவன் மெய்யடியவர்களே ஆட்கொள்ளும் முறை மிக மிக வியப்பதற்குரியது. அவர்கள் நினையாமல் இருக்கும் போதே அவன் வலிய வந்து தடுத்தாட் கொள்வான். உடையவன், தன் உடைமையைத் தேடிக் கண்டுகொள்வதைப் போல அவன் தன்னுடைய அருளைப் பாய்ச்சுவதற்குரிய அன்பர்களைத் தேடிச் சென்று கருணை காட்டுகிறான்.

ஆளான பிறகு அந்த அடியவர்கள் அவனை விடுவதில்லை. ஆனல் அவனே வேறு அன்பர்களைத் தேடிப் போய்விடுகிறான். சென்னையில் ரெயில்வே ஸ்டேஷனில் டாக்ஸிக்காரன் இப்போதெல்லாம் ஒரு காரியம் செய்கிறான். நம்மை, “வாருங்கள்” என்று வலிய அழைத்துக்கொண்டு போவான். உடனே ஏற்றிக்கொண்டு போவதில்லை. “இன்னும் ஒருவரை அழைத்து வருகிறேன்” என்று நம்மை வண்டியில் உட்கார வைத்துவிட்டுப் புதிய ஆட்களைத் தேடிக்கொண்டு போய் விடுவான். அவன் மேலும் சிலரை அழைத்து வரும் வரையில் நாம் வண்டியில் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். முதலில் டாக்ஸிக்காரன் வலிய வந்து அழைக்கும்போது, மகிழ்ந்து வண்டியில் ஏறிய நாம், இப்போது அந்த வண்டியை விட்டுப் போகவும் முடியாமல், அவன் வரும் வரைக்கும் பொறுமையோடு இருக்கவும் முடியாமல் தவிப்போம். அவன், தம் வண்டியில் ஏறினவர் இறங்கிப் போகமாட்டார் என்ற தைரியத்தில் வேறு ஆட்களை நாடிப் போய்விடுவான்.

அடியவர்கள் இறைவனைப்பற்றிச் சொல்வதைப் பார்த்தால் இந்த டாக்ஸிக்காரன் நினைவுதான் வருகிறது. “வலிய