பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

394

வடிவங்களையே காணலாம். அப்போது அவன் உள்ளே வந்து கோலம் காட்டி இயங்குவான்; பேசுவான். ஞான நிலையிலோ இந்தக் கோலம் மறைந்து அகண்ட சோதியாகி காண்பான். காணப்படும் பொருள், காட்சி ஒன்று இல்லாத அநுபவம் உண்டாகும்.

திருக்கோயில்களில் உள்ள மூர்த்திகளைப் பக்தன் இறைவனாகவே பார்க்கிறான்; களிக்கிறான்; கண்ணீர் விடுகிறான். பிரிந்து சென்றிருக்கும் காதலனுடைய படத்தை வைத்துக் கொண்டு காதலி பார்த்து பார்த்து மகிழ்கிறாள். அந்தப் படத்துக்கே முத்தமிடுகிறாள். உணர்ச்சி மிகுதியினால் உண்டாகும் விளைவுகள் இவை.

பக்தனுக்கு இறைவனாகத் தோற்றும் வடிவம், அல்லாதவனுக்குக் கல்லாகத் தோற்றுகிறது. பக்தன் உணர்ச்சியோடு பார்க்கிறான். மற்றவனோ அறிவோடு பார்க்கிறான். சுவாமியின் மேல் கரப்பான் பூச்சி ஊர்வதைப் பார்த்த அவன், இந்தக் கரப்பான் பூச்சியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாத சாமி நம்மைக் காப்பாற்றுமா?' என்கிறான். பாவம்! அவன் மூளை வேலைசெய்கிறதேயன்றி இதயம் ஈடுபடுவதில்லை. இதய உணர்ச்சியுடன் ஈடுபடும் பக்தனாய் படிப்படியாக மேல் ஏறுகிறான்.

இறைவனுடைய வடிவத்தை விக்கிரகமாகப் பார்க்கும் நிலையில் இறைவனுடைய இயல்பான உருவம் தெரிவதில்லை. படிகளெல்லாம் கடந்து மேலே போறெவனுக்கும் எல்லாம் மறந்த நிலை வருகிறது. அங்கும் உருவம் தெரிவதில்லை. உருவத்தை காணும் கண்ணே இல்லாத திரிபுடி அற்றது அல்லவா அது?

இவ்வாறு கீழ்ப்படியில் உள்ள அநுபவத்தையும் மேற்படியில் உள்ள அநுபவத்தையும் எண்ணிப் பார்க்கிறார் காரைக்கால் அம்மையார். பழிபடப் புகுந்தபோது திருக்