பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

395

கோயிலில் உள்ள உருவத்தைக் கண்டு வழிபட்டார். இறைவனைக் கண்டார். அப்போது அவனுடைய இயல்பான திருவுருவத்தைக் காணும் நிலை உண்டாகவில்லை. ஆனால் பக்தி உணர்ச்சி குறையவில்லை.

அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்

என்று அந்த நிலையைச் சொல்கிறார்.

இப்போது படிகளையெல்லாம் கடந்து மேலே வந்து விட்டார். திரிபுடி அற்ற நிலை இது. காண்பான், காணப்படும் பொருள், காட்சி எல்லாம் கடந்த அநுபவத்தில் திளைக்கும் நிலை இது. இப்போதும் திருவுருவம் தோன்றவில்லை; அதிலே கரைந்துவிட்ட பிறகு அதைத் தனியே பார்க்க முடியுமா?

இன்றும் திருவுருவம் காண்கிலேன்!

இருட்டிலே போவோருக்கும் கண் தெரியாது. ஜகஜ்ஜோதியான சூரியனைப் பார்க்கும் போதும் கண் தெரியாது. இரண்டு நிலைகளிலும் கண் பார்க்கும் ஆற்றலை இழந்தாலும் இரண்டு நிலைகளும் ஒன்று அல்ல; ஒன்று தாழ்ந்த நிலை: மற்றொன்று உயர்ந்த நிலை. கீழே இருப்பவனுக்கும் ஏணி வேண்டாம்; மாடிக்குப் போனவனுக்கும் ஏணி வேண்டாம். இதைப் போன்ற நிலைகளையே அம்மையார் சொல்கிறார். முதல்நிலை, வடிவமாகக் கண்டு இயற்கை உருவத்தைக் காணும் ஆற்றல் பெறாத நிலை. இந்த நிலையோ உருவத்தைக் காணும் ஆற்றலை, கண்களை இழந்த நிலை.

அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்;
இன்றும் திருவுருவம் காண்கிலேன்.

இந்த முரண்பாடான் நிலைகள் எல்லோருக்கும் விளங்குவதில்லை. அவர்கள் விக்கிரகத்தை வணங்குவதனால் என்ன பயன் என்று நினைக்கிறார்கள். அவர்கள்