பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/402

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

396

உலகத்திலுள்ள பிற வடிவங்களைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். ஒரு மனிதன் என்றால் அவனுக்கு உரிய அங்க அடையாளங்களைத் திட்டமாகத் தெரிந்துகொண்டவர்கள். அவர்கள் அம்மையாரைக் கேட்கிறார்களாம். “உங்கள் பெருமானுக்கு நிலையான உருவம் உண்டோ? என்றைக்கும் உள்ள உருவம் எது? சிவபிரான் எந்தத் திட்டமான வடிவத்தை உடையவர்?” என்று கேட்கிறார்கள். ‘இதுதான் அவன் உருவம்’ என்று திருக்கோயில் விக்கிரகத்தை அவர்களிடம் காட்டலாமா? ‘இது சிற்பி வடித்தது என்பார். நடராசன் என்கிறீர்கள். காலைத் தூக்கியபடி நிற்கிறானேயன்றி ஆடவில்லையே? அசையவில்லையே. இது வெறும் பொய்ம்மையல்லவா?’ என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு மேல்நிலையைச் சுட்டிக் காட்டலாம் என்றால் அதைச் சுட்டிக் காட்ட முடியுமா? தம்மையே மறந்த நிலை அது. அதை எப்படிச் சொல்வது? எப்படிக் காட்டுவது?

‘இப்படி எல்லாம் கேட்பவர்களுக்கு நான் என்ன விடை சொல்வேன்? அந்தக் கேள்விகளை உன்னிடமே சமர்ப்பிக்கிறேன். நீயே விடை சொல்’ என்று எண்ணியவரைப் போல இறைவனையே நோக்கி வினவுகிறார்.

"எம்பெருமானே, ‘என்றைக்கும் நும்பிரான் எந்த உருவத்தை உடையவன்?' என்பவர்களுக்கு அடியேன் என்ன விடைபகருவேன்? எந்த உருவத்தைச் சொல்வது? நின் உருவம் எது?” எனறு கேட்கிறார். அதுவே பாடல் உருவை எடுக்கிறது.

அன்றும் திருஉருவம் காணாதே ஆட்பட்டேன்;
இன்றும் திருஉருவம் காண்கிலேன்——என்றுந்தான்