பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

397

எவ்வுரு வோன் நும்பிரான்?' என்பார்கட்கு ஏதுஉரைப்பேன்?
எவ்வுருவோ நின்உருவம் ஏது?

(எம்பெருமானே, உன்னை வழிபடத் தொடங்கிய அந்தக் காலத்திலும் உன்னுடைய இயல்பான திருவுருவத்தைக் காணாமலே உனக்கு அடிமையானேன்; உன்னுடைய திருவருளால் உன் அருளநுபவத்தைப் பெற்று நிற்கும் இப்போதும் உன் திருவுருவத்தை நான் காணவில்லை. உம்முடைய கடவுள் என்றைக்கும் எந்த உருவத்தை உடையவன்?" என்று கேட்கிறவர்களுக்கு நான் எந்த விடையைச் சொல்வேன்? எந்த உருவத்தைச் சொல்வது? நின் உருவம் எது?

அன்றும் என்பது நெஞ்சறி சுட்டு; சரியைக் காலத்தை சுட்டியபடி. ஆட்படல்-அவனுக்கு அடியாராக அமைதல். இன்று என்றது அனுபவம் முற்றிய நிலையைப் பெற்ற காலத்தைக் குறிப்பது. என்றுந்தான்; தான், அசை, எவ்வுருவோ அவர்களுக்கு உரைப்பது எந்த உருவத்தை உருவங்களுக்குச் சொல்லுவது? நின் உருவம் ஏது-உனக்கு உருவம் ஏது? இயல்பாக இல்லை என்றும் பொருள் கொள்ளலாம்.

அற்புதத் திருவந்தாதியில் 61-ஆம் பாடல் இது.