பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63. வேட வடிவம்


ஒரு சமயம் அருச்சுனன் தவம் செய்து கொண்டிருந்தான். அப்போது ஓர் அசுரன் பன்றிவேடம் பூண்டு அவன் தவத்தைக் கலைக்க முயன்றான். சிவபெருமானும் இறைவியும் வேடுவன் வேடுவச்சி போலக் கோலம் பூண்டு அங்கே வந்தார்கள். அருச்சுனன் அந்தப் பன்றியை அம்பினால் எய்தான். அதே சமயத்தில் சிவபெருமானும் அதை எய்தான். ஒரே விலங்கின் மேல் இருவரும் எய்த போது அந்த இருவர்களுக்குள்ளும் பூசல் ஏற்பட்டது. ‘நான் எய்த ஒரு விலங்கை நீர் எப்படி எய்யலாம்?’ என்று அருச்சுனன் கேட்டான். ‘நான்தான் முதலில் எய்தேன்’ என்று சிவபெருமானாகிய வேடன் சொன்னான். இதனால்தான் இருவருக்கிடையிலும் சண்டை மூண்டது. இருவரும் போரிட்டார்கள். அப்பொழுது அருச்சுனன் தன் வில்லால் இறைவனை அடித்தான். இறைவன் வேட உருவம் மாறித் தன் இயற்கையான கோலத்தைக் காட்டி அருச்சுனனுக்கு அருள் செய்தான்.

இந்தக் கதை பாரதத்தில் வருகின்றது; வடமொழியில் இறைவன் செய்த இந்தத் திருவிளையாடலைப் பற்றி, "கிராதார்ஜூனியம்’ என்று ஒரு காவியமே இருக்கின்றது. காரைக்கால் அம்மையார் இந்தத் திருவிளையாடலை எண்ணிப் பார்க்கின்றார். வேடனாகக் கோலம் பூண்ட சிவபெருமான் எப்படிக் காட்சியளித்திருப்பான்? அந்த வடிவத்திற்கு எதை உவமை கூறுவது? அந்தக் காலத்தில் உடன் இருந்து பார்த்தவர்கள் யாரும் இப்பொழுது இல்லையே. இறைவனுடைய உண்மையான வடிவு