பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



400

எது ஒக்கும்? எது ஒவ்வாது?

அந்த வடிவுக்கு எதை உவமை சொல்வது? எந்த வடிவம் அதனை ஒக்கும்; எந்த வடிவம் அதற்கு ஒவ்வாது? ஒவ்வொன்றாக அம்மையார் நினைத்துப் பார்க்கின்றார். எதுவும் சரிப்பட்டு வரவில்லை.

ஏது ஆகும்? ஏது ஆகாது?

மறுபடியும் சிந்தித்துப் பார்க்கின்றார். எந்த வடிவத்தைச் சொல்லலாகும் என்று யோசிக்கின்றார். சிலவற்றை எண்ணும்போது அவற்றைச் சொல்லலாகாது என்று தோன்றுகின்றது. இப்படி எண்ணி எண்ணித் தடுமாறுகின்றார்.

இறைவன் தனக்கு உவமை இல்லாதவன். மிகவும் நுட்பமாக உள்ள அவனைச் சுட்டிக் காட்ட முடியாது; எந்த அளவையாலும் அளந்துவிட முடியாது. ஆதலால் அவனுக்கு, அப்பிரமேயன் என்று பெயர் வந்தது. உபமானம் சொல்ல முடியாமையால், ‘அநுபமன்’ என்ற திருநாமமும் வந்தது. ஆனால் வடிவு கொண்டபொழுது அதையாவது இப்படி இருக்கும் என்று உவமை சொல்லிப் பார்க்கலாம் என்றாலோ, அதுவும் இயலாத காரியம் என்று தோன்றுகிறது. கண்ணிலே கண்ட உருவத்துக்கு ஒருவாறு உவமை சொல்லிவிடலாம். ஆளுல் வேடனாகக் கோலம் பூண்ட போது எடுத்த வடிவத்திற்கு உவமை சொல்ல வேண்டுமானால் அதை பார்த்தவரால்தான் சொல்ல முடியும். அந்தத் திருவிளையாடல் நிகழ்ந்த காலம் மிகமிகப் பழமையானது. அதை, இப்பொழுது எண்ணிப் பார்த்தால் இப்படி இருக்கலாம் என்று ஊகித்துச் சொல்ல முடியாத திண்டாட்டம் ஏற்படுகின்றது. உலகில் உள்ள பொருள்களை உவமானம்