பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64. திங்கள் நிலா


இறைவனைச் சார்ந்த எல்லாப் பொருள்களும் இயல்பாக மெலிவுடையவையாக இருந்தாலும் சார்ந்த இடத்தின் சிறப்பினால் வலிமையைப் பெறும். பாம்புக்குக் கருடன் பகை. கருடனைக் கண்டால் பாம்புகள் அஞ்சும். ஆனால் சிவபெருமான் அணிந்துள்ள பாம்புகள் கருடனைக் கண்டு அஞ்சுவதில்லை. “ஏன் கருடா சுகமா?” என்று அந்தப் பாம்புகள் கேட்டனவாம். “இருக்கிற இடத்தில் இருந்தால் சுகந்தான்" என்று கருடன் சொல்லியதாம். இதிலிருந்து சார்பின் பலத்தினால் மிக்க வலிமையும் துணிச்சலும் உண்டாகும் என்பது தெரியவரும்.

சந்திரன் சூரியனைவிட ஒளி குறைந்தது. சூரியனிடத்திலிருந்தே சந்திரன் ஒளியைப் பெறுகிறதென்று விஞ்ஞானம் சொல்கிறது. புராணமும் அப்படித்தான் சொல்கிறது. இரவில் ஒளி தருவது சந்திரன். அது நாளுக்கு நாள் தேய்ந்து வருவது மறுபடியும் வளர்வது. சூரியனுக்கு அந்தக் குறைபாடு இல்லை. சூரியனுடைய ஒளி பகலில் நன்றாகப் பரவும். அதன் முன் சந்திரன் ஒளியிழந்து நிற்கும்.

இறைவன் திருமுடியில் இருக்கும் சந்திரன் தேய்வதில்லை; வளர்வதில்லை; இறைவனைச் சார்ந்ததனால் உண்டான வலிமை அது. இறைவன் முடிமேல் இருப்பதால் மக்கள் அதை வணங்குகிறார்கள்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கிறார் காரைக்கால் அம்மையார். இறைவன் சடையில் உள்ள நிலா எப்படி ஒளி வீசும்? சூரியனுடைய ஒளி மிகப் பிரகாசமாக இருக்குமே! வானில் உள்ள சந்திரனுடைய ஒளி அவ்வளவு பிரகாசமாக