பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

வந்து தடுத்தாட் கொண்டான். ஆனால் பிறகு எம்மை அணுகி இன்பம் தராமல் அலைக்கழிக்கிறான்” என்ற கருத்துப்பட அருளாளர்கள் பாடியிருக்கிறார்கள்.

‘நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்’ என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். வாழைக்குலையை மரத்திலிருந்து வீட்டுக்குக் கொண்டுவந்து, உடனே பயன்படுத்தாமல் அதை மூட்டம் போட்டுக் கனியவைக்கிற செயல்போன்றது, அடியாரான பிறகு நைய வைக்கிற செயல்.

“நல்லவர்களுக்குக் காலம் இல்லை. எத்தனையோ பக்தர்கள் இன்னல்படுகிறார்கள்”” என்று பலர் குறைப்படுவதை நாம் கேட்டிருக்கிறோம். அடுத்த வீட்டுப் பையன் பண்ணாத அக்கிரமமெல்லாம் பண்ணுவான். அவனை நாம் ஒன்றும் பண்ணுவதில்லை. நம் பையன் சிறு தவறு செம்தாலும் உடனே கண்டிக்கிறோம். நம் பையன் என்னும் உரிமை, அன்பு செய்வதற்கு மட்டுமா உரியது? கண்டிப்பதற்கும் உரியது. ஆகவே, இறைவன் தன்னால் ஆட்கொள்ளப்பட்டவர்களை உரிமை பற்றிச் சோதனை செய்கிறான்.

தங்கத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள். தங்கமாக, தங்கக் கட்டியாக வாங்கியதை அப்படியே பயன்படுத்த முடியாது. அணிகலனாகச் செய்துதான் பூட்டிக்கொள்ள வேண்டும். அதற்காகத் தங்கத்தை உருக்கியும் தட்டியும் கம்பியாக நீட்டியும் பக்குவப்படுத்துகிறார்கள். அணிகலனாவதற்குள் நெருப்பிலும் பட்டடைக் கல்லிலும் புகுந்து பலவகையான சோதனைக்கு உள்ளாகிறது தங்கம்.

இறைவனும் மற்றவர்களேயெல்லாம் ஒதுக்கிவிட்டுச் சிலரை ஆட்கொள்கிறான்; தங்கத்தை வாங்குவது போன்றது இது. அப்படி ஆளான அடியவர்களுக்குப் பலவகைச் சோதனைகளை உண்டாக்குகிறான். அடியவர்களாகி விட்டபடியால் அவர்கள் இறைவனை விட்டு நீங்க முடியாமல் இறுகப் பிணைத்த அன்பில் மாறாமல் இருப்பார்கள். ஆனாலும் அவன்