பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

405

ஆனால் இறைவன் திருமுடிச் சந்திரனுக்கு அத்தகைய சிறப்பு இருக்கலாம். ஆதலினால் இப்படிக் கேட்கிறார்.

இறைவனை விளித்தே கேட்கிறார். இறைவனை எப்படி அழைக்கிறார்?

இறைவன் வேறு எங்கும் காணக் கிடைக்காத புதுமையை உடைய சோதி. அவனுடைய திருமேனிச் சோதி ஒளி மயமானது. ஆகவே,

கடிஉலவு...சோதியாய்!

என்கிறார்.

இறைவன் புகழைச் சொல்லப் புகுந்தால் அதற்கு முடிவே இல்லை. “பாதாளம் ஏழினுங்கீழ்ச் சொற்கழிவு பாத மலர்”' என்பது திருவாசகம். எவ்வளவு புகழ்ந்தாலும் புகழும் சொல் சோர்வடையுமேயன்றி அவன் புகழுக்கு எல்லை காண முடியாது.

சொல்முடிவு ஒன்று இல்லாத
சோதியாய்!

என்று இறைவனைக் கூறுகிறார். அவனேயே, "நான் கேட்கும் வினாவுக்கு விடை சொல்” என்று விண்ணப்பித்துக் கொள்கிறார்.

சொல்லாயால்.

“நின் திருமுடிமேல் திங்களை அணிந்திருக்கிறாய். சொல் முடிவு ஒன்று இல்லாத சோதியைச் சார்ந்தமையால் அதற்கும் எல்லை இறந்த ஒளி கிடைத்திருக்கும். ஆகவே கேட்கிறேன்” என்பவரைப் போலப் பேசுகிறார்.

சொல்முடிவு ஒன்று இல்லாத
சோதியாய், சொல்லாயால்
நீன்முடிமேல் திங்கள்நிலா.