பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

67. கழுத்தில் உள்ள நஞ்சு


சிவபெருமானுடைய திருமேனி செக்கச் செவேலென்றிருக்கும். “சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்” என்று திருநாவுக்கரசர் பாடுகிறார். அப்பெருமான் அணிந்திருக்கும் பொருள்கள் வேறு வேறு நிறமாக இருக்கும். சிவந்த மேனியாகிய நிலைக்களத்தில் அவை எடுப்பாகத் தெரியும். அவருடைய திருமார்பில் நாகப்பாம்பை அணிந்திருக்கிறார். அது தலைப்பக்கம் கரிய நிறமுடையதாகத் தோன்றுகிறது. சிவப்பான திருமேனியிலே அது புரளுவதை எளிதில் இனம் கண்டுகொள்ளலாம். அது படம் எடுத்து ஆடும். ஆகவே அதைக் காரைக்காலம்மையார், பைத்து ஆடும் ...பாம்பு’ என்று சொல்கிறார்.

இறைவனுடைய திருக்கழுத்தில் கருநிறம் இருக்கிறது. அது நீலகண்டம் அல்லவா? காரைக்கால் அம்மையார் அடிக்கடி அந்த நீலகண்டத்தைப் பற்றிச் சொல்லுவார். அந்தக் கண்டம் கறுக்காவிட்டால் ஆலகால நஞ்சினால் தேவர்கள் இறந்து போயிருப்பார்கள். அவர் மனைவிமார் கழுத்தில் மங்கல அணி இல்லாமல் போயிருக்கும்.

சிவபெருமானுக்கு நஞ்சைக் கண்டாலும் அச்சம் இல்லை; தஞ்சை உடைய பாம்பைக் கண்டாலும் அச்சம் இல்லை. அவர் அமிர்தமயமானவர். "கண்ணார முதக் கடலே போற்றி” என்று மணிவாசகர் பாடுவார். மரணத்தை உண்டாக்கும் காலனே சிவபெருமானால் மரணம் அடைந்தான் என்றால் இந்த விஷமெல்லாம் அவருக்கு எந்த மூலை?

விஷம் அவருடைய திருக்கழுத்தில் நீலமணியைக் கட்டியது போல ஒளிர்கிறது. திருமார்பிலே உள்ள பாம்பும்