பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418

காரைக்கால் அம்மையார் சிவபெருமனை வினவும் விவைாக உள்ள பாடல்களில் ஒன்றை இப்போது பார்க்கலாம்.

பெருமானுடைய திருக்கழுத்திலும் பாம்பின் கழுத்திலும் கரிய நிறத்தைக் கண்ட அம்மையார், "இரண்டிடங் களிலும் எப்படி இந்தக் கறுப்பு வந்தது?' என்று எண்ணமிடுகிறார். சிவபிரான் திருக்கழுத்தில் கறுப்பு அமைந்ததற்குரிய காரணம் அவர் அறிந்ததே. ஆனால் இந்தப் பாம்புக்கும் எப்படிக் கழுத்தில் கருநிறம் வந்தது?

சிவபெருமானை நோக்கி வினாவத் தொடங்குகிறார். “திருக்கழுத்தில் ஆலகால நஞ்சை அடக்கி வைத்துக்கொண்ட பெருமானே?” என்று அவரை விளிக்கிறார்.

மிடற்றில் விடம் உடையீர்.

‘உம்முடைய மார்பில் படம் விரித்து ஆடுகிறதே, அந்தப் பாம்பின் கழுத்தும் கரியதாக இருக்கிறதே! கருமை பரந்து இருளைப் போல அந்தப் பாம்பின் கழுத்தில் உள்ள வண்ணம் மிகக் கரியதாக இருக்கிறதே!’

மிடற்றகத்து
மைத்தாம் இருள்போலும்
வண்ணம் கரிதாலோ,
பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.

‘இதற்கு என்ன காரணம்? அந்தப் பாம்பு உம்முடைய கழுத்தைச் சுற்றிக் கொண்டிருக்கிறதே! அந்தக் கண்டத்தை நக்கி நக்கி அங்குள்ள விடத்தின் கறுப்பு அதன் கழுத்தில் ஏறி விட்டதோ? அதுவும் அந்த விடத்தைத் தன் கழுததில் கொண்டுவிட்டதோ?’

உம்மிடற்றை நக்கி
மிடற்றில் விடம்கொண்ட வாறோ?