பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

ஆய்த்தகலை கற்றுணர்ந்த
அணங்கனையார் தமக்குள்
ஆர்செய்த போதனையோ?......”

என்பது அவர் பாடல்.

இத்தகைய ஒரு நிலையில் நின்று காரைக்காலம்மையார் பாடுகிறார்.

“இறைவன் என்ன ஆட்கொண்டான்; அவனுக்கு ஆட்பட வேண்டும் என்ற எண்ணமே இல்லாதபோது, நான் விண்ணப்பித்துக்கொள்ளாமலே என்னை ஆட்கொண்டான். கேளாமலே கொடுக்கிற ஈகையைப் போன்றது இது.”

அப்போது அவனுடைய நீண்ட திருமேனியைத் தரிசித்தேன்; நெடிது உயர்ந்த திருமேனி அது. அந்தத் திருக்கோலத்தில் ஒன்றைக் கண்டேன். தூரத்திலிருந்து பார்த்த போது ஒரே செம்மைமயம்; அந்திவண்ணன், தீ வண்ணன். என்றெல்லாம் சொல்வதற்குப் பொருத்தமாக அமைந்த வடிவம் அது. ஆனால் அவனை அணுகிப் பார்த்தபோது ஒன்றை உணர்ந்தேன். அவன் திருமிடறு சிவப்பாக இல்லை; மற்றொன்றாக, அந்த மேனி வண்ணத்துக்கு மாறாக இருந்தது. முழுச் சிவப்பில் அந்தக் கருமை நன்றாக விட்டு விளங்கியது.”

"அவன் வடிவந்தான் முதல் பார்வையில் முழுச்செம்மையாகத் தோற்றிப் பிறகு கழுத்துக் கறுப்புத் தோன்றியது என்று எண்ணினேன்; ஆனால் அவன் இயல்பும் அப்படித்தான் இருக்கிறது.”

“கேளாமை....எம்மை.ஆட் கொண்ட இறை”

அவன் வடிவம் முதலில் செம்மையாகத் தோற்றியது பிறகு, நெருங்கியபோது,

‘இங்கே கறுப்பும் இருக்கிறது’ என்று தெரியவந்தது.

“நீளாகம்; செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்”