பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

426

திருமுடியில் அவன் நிறைவுபெருத இளம்பிறையைச் சூடியிருக்கிருன், அதன் நிலவொளியில் இந்தச் சிவப்புப் பளிச் சென்று விளங்குகிறது. ஊடலைத் தீர்க்கும்பொருட்டு வணங்கித் தன் முடிக்குச் செவ்வண்ணக் கோலத்தை உண்டாக்கியிருக்கிறான். வானத்தில் தோன்றும் செக்கர் வானத்தைக் காட்டிலும் இப்போது சிவப்பாக இருக்கிறது அந்த முடி. முன்பு எல்லாம் செஞ்சடை செக்கர் வானத்தை ஒத்து விளங்கும். இப்போது அதைவிட அதிகச் சிவப்பாகக் கோலம் காட்டுகிறது.

அந்தக் கோலத்தை வருணிக்கிறார் அம்மையார்.

சிலம்படியான் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச்
சிலமபடிமேல் செவ்வரத்தம் சேர்த்தி — நலம்பெற்று
எதிராய செக்கரினும் இக்கோலம் செய்தான்
முதிரா மதியான் முடி.

[முதிராத இளம்பிறையை அணிந்த இறைவன் சிலம்பை அணிந்த திருவடியை உடைய அம்பிகையின் ஊடலத் தானே போக்குவதற்கு விரும்பி, அப் பெருமாட்டியின் சிலம்படியின் மேல் உள்ள செம்பஞ்சுக் குழம்பைப் படச்செய்து, அழகு பெற்று, முன்பு ஒப்பாக உள்ள செவ்வானத்தை விடச் கிவப்பாக உள்ள இக் கோலத்தைத் திருமுடிக்குச் செய்தான்.

மதியான், வேண்டி, சேர்த்தி, முடி, இக்கோலம் செய்தான் என்று கூட்டிப் பொருள் செய்க.

ஊடலால் பிரிந்து சென்றபோது சிலம்பின் ஒலி கேட்டதால், அதைக் கொண்டு சிலம்படியார் என்றார். பின்பு இறைவன் பணியும்போதும் அச்சிலம்பு ஒலித்தமையால் மீண்டும் சிலம்படியான் என்றார். முதலிற் சிலம்பு ஒலித்தது