பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

“அவன் செய்யும் செயலும் இந்தக் கோலத்தை ஒத்தே இருக்கிறது.” எப்படி?

"நான் விண்ணப்பம் போடாமலே என்னை வலிய வந்து ஆளாக்கிக் கொண்டான் ஆனாலும் என் அல்லல்கள் போகவில்லை. அவற்றைத் தீர்க்க எண்ணி அவனிடம் முறையிட்டேன்; எவ்வளவோ வகையாக முறையிட்டேன். அவன் செவி கொடுக்கவில்லை. முன்பு வலிய வந்து அடிமை கொண்டவன் இப்போது நாம் எத்தனை சொன்னாலும் கேளாமல் இருக்கிறானே; இது நியாயமா?

“இது பெரிய முரண்பாடு அல்லவா! அடிமையாவதுதான் அருமை. ஆட்கொள்வதும் அருமை. அதை எளிதில் வலிய வந்து செய்தவன், நினைத்தால் எளிதிலே என் அல்லலைப் போக்கிவிடலாமே! அவன் அதைச் செய்யவில்லையே! இதற்குக் காரணம் என்ன?

“அவன் திருமேனி சிவப்பாகத் தோற்றி அணுகியபோது திருமிடறு வேறு நிறமாக இருப்பதைப்போலவே, பெருங் கருணையுடையவனைப்போல வலிய வந்து ஆண்டுகொண்டவன், என் அல்லலைத் தானாகவே அறிந்து போக்குவது முறையாக இருக்க, நான் பலமுறை முறையிட்டும் கேளாமல் இருக்கிறான். இரண்டுக்கும் ஒரு பொருத்தம் இருக்கிறது.”

இப்படி விளக்கம் கொள்ளும்படி அம்மையார் பாடுகிறார்.

"ஆள்ஆனோம், அல்லல் அறிய முறையிட்டால்
கேளாத தென்கொலோ? கேளாமை—நீளோகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை."

[கேளாமை எம்மை ஆட்கொண்ட இறை—யாம் விண்ணப்பம் செய்துகொள்ளாமலே எம்மை அடியவனாகக் கொண்ட இறைவன், நீள் ஆகம் செம்மையான் ஆகி-உயர்ந்த திருமேனி முழுச்சிவப்புடையவனாகி, திருமிடறு மற்றொன்று.