பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



430


இறைவனுடைய திருவடியைத் தலைமேற் கொண்டமையால் கூற்றுவனை ஒரு பொருளாக மதித்து அஞ்ச மாட்டோம் என்று அம்மையார் சொல்கிறார்.

இனிமேல் கூற்றுவனால் உண்டாகும் துன்பம் இல்லை என்ற உணர்வோடு, இங்கே வாழும் போதும் பெருமிதத்தோடு வாழும்நிலை அன்பர்களுக்கு உண்டாகிறது. “”இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை” என்று அப்பர் சொல்வதுபோல இந்த உலகிலேயே துன்பமின்றி இன்பத்துடன் நல்ல வண்ணம் வாழும் வாழ்க்கை உண்டாகிறது. இந்த உலகில் யாருக்கும் தலை தாழ்ந்து குனியவேண்டிய நிலை அவர்களுக்கு இராது.

படிமேல்
குனியவலம்

இறைவனுக்கு அடியார் என்பதிலே உண்டாகும் எக்களிப்பு வேறு எதனாலும் வராது. அவனுக்கு அடிமையான பண்பை யாவரும் கொண்டாடுவர்கள். “பத்தாாய்ப் பணி வார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளே சொல்லும்போது மற்றவர்கள் பாராட்டுவது என்ன அதிசயம்? ‘எங்களிடத்தில் ஆகும் இந்த அடிமைத் தன்மையைப் பெரியவர்கள் கொண்டாடும் பேறு பெற்றோம்’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் அம்மையார்.

ஆம் அடிமை கொண்டாடப் பெற்றோம்

வருங்காலத்தில் யமன் வருவானே என்று மிகப் பெரியவர்களும் அஞ்சும் அச்சம் இல்லை. நிகழ்காலத்திலோ எல்லோருக்கும் மேலவனாகிய சிவபெருமானுக்கு அடியார்களான தன்மையால் யாருக்கும் தலை தாழ்ந்து குனிய வேண்டிய நிலையில் இல்லை. அரசர்க்கோ செல்வர்ககோ அடிமைத் தன்மை கொண்டிருந்தால் அதைச் சான்றோர் பழிப்பர். ஆனால் சிவபெருமானுக்கு அடியார்களாகிய தன்மையைப் பெரியவர்கள் கொண்டாடுகிறார்கள். எனவே,