பக்கம்:காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி.pdf/442

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

432


கொள்ளலாம். இனி - இப்போது, இனிமேல் என்பதும் பொருந்தும். அவலம்-துயரம்.

முக்கணான் அடியை மேற்கொண்டு கூற்றை மதியோம்; படிமேல் குனிய அல்லம்; கொண்டாடப் பெற்றோம்; அவலம் உண்டோ என்று கூட்டிப் பொருள் செய்க.]

இறைவனுக்கு அடியார்களானவர்களுக்கு இம்மையிலும் துன்பம் இல்லை; மறுமையிலும் துன்பம் இல்லை என்பது கருத்து.

அற்புதத் திருவந்தாதியில் 69-ஆவது பாடலாக உள்ளது இது.